விஜய் சேதுபதிக்கு வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர்.! படம் வேற லெவலில் அதிரடி

vijay-sethupathi

நடிகர் விஜய் சேதுபதி தமிழ்சினிமாவில் வருடத்திற்கு அரைடஜன் திரைப்படங்களில் நடித்து வருபவர்,  மேலும் அரை டஜன் திரைப்படங்களில் தற்பொழுது பாதி படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன.

பல நடிகர்கள் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கர்வத்துடன் இருப்பார்கள்,  ஆனால் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் அதன் பிறகு தற்போது முன்னணி நடிகர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன், லாபம் துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர் என பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் பிரத்தியோக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

vijay sethupathi
vijay sethupathi

அது என்னவென்றால் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனரான மகிழ்திருமேனி நடிக்க இருக்கிறாராம். அதுவும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவல் சினிமாவில் உள்ள நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ளது. படத்தை வெங்கட் கிருஷ்ணா லோக்நாத் இயக்கும் இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஒரு இயக்குனரே வில்லனாக நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

vijay sethupathi