பிரியமானவளே திரைப்படத்திற்கு டப் கொடுக்கும் அளவிற்கு ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.!

thenral vanthu yennai thota
thenral vanthu yennai thota

விஜய் தொலைக்காட்சியில் மதியம் 3 மணி அளவில் ஒளிபரப்பப்படும் நாடகம் தான் தென்றல் வந்து என்னைத்தொடும் என்னும் நாடகம். இந்த நாடகத்தில் வெற்றி மற்றும் அபி என்னும் கதாபாத்திரங்கள் முதன்மையானவை. இந்த நாடகத்தில் வெற்றி என்பவர் ரவுடியாக சித்தரிக்கப்பட்டுள்ளார், அபி என்பவர் வெளிநாட்டில் படிப்பை முடித்து நல்ல படித்த பெண்ணாகவும், பணக்கார வீட்டு பெண்ணாகவும் இருக்கிறார்.

இப்படி இருக்க ரவுடியான வெற்றிக்கும் நன்கு படித்த மற்றும் பணக்கார பெண்ணான அபிக்கும் திருமணம் நடக்கிறது. இதன் பின் அபி நமக்கு தாலிகட்டியவர்தான் இனி நமக்கு எல்லாமே என்று மனதில் நினைத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்று வாழ முயற்சிக்கிறார். என்னதான் அபி வெற்றியிடம் அன்பாக இருக்க முயற்சித்தாலும், தன்னுடைய குணத்திலிருந்து கடுகளவும் மாறாத வெற்றி எப்பொழுது அபியுடன் சேர்ந்து வாழ்வார் என்று அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தென்றல் வந்து எண்ணை தொடும் நாடகத்தின் புரோமோவில் அபியின் அப்பா பயங்கர தீவிரவாத கும்பலால் கடத்தப்படுகிறார். அவரை காப்பாற்றி கொடுத்தால் நீ இந்த வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று ஒரு அக்ரீமெண்ட் போடுகிறார் வெற்றி,அதற்கு அபியும் ஒப்புக்கொள்ள அபியின் தந்தையை காப்பாற்றி வருகிறார் வெற்றி.

அதன் பிறகு தனது பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அபி வீட்டை விட்டு தனது அம்மா வீட்டிற்கு செல்லும்போது தாலியை கழட்டி கொடுத்துவிட்டுப் போ என்று கூறுகிறார். வெற்றி, இந்த தாலியாவது உங்களது ஞாபகமாக என்னுடன் இருக்கட்டுமே என்று கண்கலங்கி கூறுகிறார் அபி,இத்துடன் ப்ரோமோவும் முடிவடைந்தது.

இப்படி பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் இந்த நாடகம் ரசிகர்களிடையே மிக அதிக ஆர்வத்தையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் என்ன இவர்கள் அக்ரிமெண்ட் எல்லாம் நாடகத்தில் போடுகிறார்கள் ஒருவேளை பிரியமானவளே படத்தை பார்த்து காப்பியடித்திருப்பார்களோ என்று நெட்டிசன்கள் இணையதளத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.