44 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடித்த 36 வயது நடிகை..! விஜய் டிவியில் நடக்கும் மானங்கெட்ட பொழப்பு..

Vijay Tv Serial: திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு ஒரு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரை சீரியல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. ஏராளமான குடும்ப இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக அமைந்துள்ளது எனவே சீரியல் மக்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.

தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு புதிய சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் விஜய் டிவியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும். சுவாரசியமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பூந்தோட்ட காவல்காரன் விஜயகாந்தின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத புகைப்படம்

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தொகுப்பாளர் தீபக் மற்றும் நக்ஷத்திரா இருவரும் ஜோடியாக நடித்த வருகின்றனர். தீபக்கின் அம்மாவாக மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் தீபத்தின் வயது 45 அதேபோல் கோதை கேரக்டரில் தமிழின் அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணனுக்கு வயது வெறும் 36 தான்.

இவ்வாறு தன்னை விட 8 வயது அதிகமான தீபக்கிற்கு அம்மாவாக நடித்து வருகிறார் மீரா. மீரா பார்ப்பதற்கு வயதானவர் போல் தெரிவதால் இதனை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் இவரே ஒரு பேட்டியில் தீபக் என்னை விட வயதில் பெரியவர் என கூறியிருந்தார். மீரா பொக்கிஷம், நாயகி வந்தால், ஸ்ரீதேவி, சித்தி 2 உள்ளிட்ட பல சீரியல்களில் அம்மாவாக நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் குதித்தார்.

உன்னால தான் என் புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சு.. மருமகள் முன்னாடி விஜயாவை திட்டிய பாட்டி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இவ்வாறு வயதில் சிறியவராக இருந்தாலும் தனக்கு கொடுக்கும் அம்மா கேரக்டரில் மீரா சிறப்பாக நடித்து வருவதனால் ரசிகர்கள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தன்னை விட வயது குறைவான மீராவிற்கு பையனாக நடிப்பதற்கு தீபாவத்திற்கு கொஞ்சம் கூட கூசவில்லையா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.