அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.. சர்வாதிகாரம் பண்ணும் நிக்சன் – வெளியான ப்ரோமோ

BiggBoss 7 Promo : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஒன்பதாவது வாரத்தில் பயணித்து வருகின்றன.. முந்தைய சீசனை காட்டிலும் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. கடந்த வாரம் அக்ஷயா மற்றும் பிராவோ பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகினர்.

பிறகு விஜய் வர்மா மற்றும் அனன்யா புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் வந்துள்ளனர்.. இந்த வாரம் கேப்டனாக நிக்சன் பதவி ஏற்று இருக்கிறார்.. அதில் ஒரு புதிய ரூலாக பிக் பாஸ் ஒரு மணியை வைத்து போட்டியாளர்களிடம் கேப்டனால் உங்களுக்கு ஏதாவது அநீதி ஏற்பட்டுள்ளது என்று நினைத்தால்..

வாழ்க்கை ஒரு முறை வாழ்ந்து பார்.. நடிகர் திலகம் சிவாஜி உடன் மோதி 4 முறை வெற்றி கண்ட ரஜினி.!

இந்த மணியை அடித்து காரணத்தை சொல்லலாம் இது மாதிரி மூன்று முறை மணி அடிக்க தகுந்த காரணங்களாக இருந்தால் கேப்டன் மாற்றப்படுவார் அது மட்டுமில்லாமல் அடுத்த வாரத்திற்கு டைரக்டாக நாமினேட் செய்யப்படுவார் என்று பிக் பாஸ் கூறியிருந்தால் தினேஷ் மற்றும் விஷ்ணு இரண்டு பேர் மணி அடித்து சில காரணங்களை சொல்லி இருந்தனர்..

இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய எபிசோடு காண முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கின்றன அதில் பிக் பாஸ் வீடு அரண்மனையாக மாறி உள்ளது மகாராஜாவாக கேப்டன் இருக்கு முடி சூட்டப்படுகிறது பிறகு கேப்டன் நிக்சன் போட்டியாளர்கள் பலருக்கும் பல பனிஷ்மெண்டை கொடுக்கிறார்.

மருமககளை வீட்டுக்கு அழைக்க வந்த விஜயா.. கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக உட்கார்ந்திருந்த ஸ்ருதி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதில் ரவீனா, ஜோவிகா, விக்ரம் மூன்று பேரையும் மழையில் முட்டி போட வைக்கிறார்.. அதற்கு நிக்சனை கேள்வி கேட்பதற்கு இது என்னுடைய ஆட்சி சர்வாதிகாரம் பண்ணுவேன் என்று பதில் சொல்லும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன.