வாழ்க்கை ஒரு முறை வாழ்ந்து பார்.. நடிகர் திலகம் சிவாஜி உடன் மோதி 4 முறை வெற்றி கண்ட ரஜினி.!

இளம் நடிகர்கள் பெரிய  ஜாம்பவானுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றதுண்டு அப்படி நடிப்பிற்கு பெயர் போன சிவாஜி கணேசன் பல வெற்றி படங்களை கொடுத்தவர்  அப்படிப்பட்ட சிவாஜியின் படங்களுடன் ரஜினி படம் மோதி 4 முறை வெற்றி கண்டுள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

பட்டாகத்தி பைரவன் – அன்னை ஒரு ஆலயம் : சிவாஜி கணேசன் படத்திற்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது அப்படி சிவாஜி கணேசன், ஜெய்கணேஷ், ஜெயசுதா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான பட்டாகத்தி பைரவன் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது இந்த படத்தை எதிர்த்து ரஜினியின் அன்னை ஒரு ஆலயம் மோதியது இதில் பட்டாகத்தி பைரவனுக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தாலும் போகப்போக அன்னை ஓர் ஆலயம் நன்றாக ஓடி வெற்றி பெற்றது.

மருமககளை வீட்டுக்கு அழைக்க வந்த விஜயா.. கால் மேல் கால் போட்டு தெனாவட்டாக உட்கார்ந்திருந்த ஸ்ருதி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

விஸ்வரூபம் – பொல்லாதவன் : சிவாஜி கணேசன் நடிப்பில் திரிலோக சந்தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்தார். அந்த சமயத்தில் ரஜினியின் பொல்லாதவன் படம் வெளியானது பொல்லாதவன் படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல் படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் சலிக்காமல் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.

கல்தூண் – தில்லுமுல்லு : நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா இணைந்து நடித்த திரைப்படம் கல்தூண் ஊரில் பெரிய மனுஷன் ஆக இருக்கும் பரமேஸ்வர கவுண்டர் மற்றும் அவருடைய குடும்பத்தை சுற்றி நடக்கும் கதை தான் இது இந்த படத்தை எதிர்த்து ரஜினியின் தில்லு முல்லு படம் வெளியானது இதுவரை ஆக்சன்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த ரஜினி இந்த படத்தில் சற்று நகைச்சுவையாக நடித்திருப்பார் படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இன்று இரவு நீதான்.. படுக்கைக்கு அழைத்த இயக்குனர் இவர்தான்…! பெயருடன் தில்லாக கூடிய ஷகீலா.

ரிஷிமூலம் – பில்லா : சிவாஜி கணேசன் உடன் இணைந்து கே ஆர் விஜயா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் குடும்ப படமாக இருந்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதேசமயம் ரஜினியின் பில்லா திரைப்படம் மிகப்பெரிய ஆக்சன் படமாக இருந்ததால் இளம் தலைமுறை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பெரிய ஹிட் அடித்தது.