அமிர்தாவிடம் கேள்வி கேட்கும் கதிர்! என்ன சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்து நிற்கும் எழில்.!

baakiya lakshmi and bharathi kannama
baakiya lakshmi and bharathi kannama

தற்போதெல்லாம் இரண்டு முக்கிய சீரியல்கள் இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் பாக்கியலட்சுமி மற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து ஒரு மணி நேர ஸ்பெஷலாக மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்தவகையில் கோபியை பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர்கள் படாதபாடு படுத்தி வருகிறார்கள். கோபியின் அப்பாவிற்கு பிறந்தநாள் வருவதால் ராதிகா மற்றும் தனம் இருவரும் இணைந்தே ராதிகா வைத்ததற்காக சென்றனர். அப்பொழுது பாக்கியா ராதிகாவிடம் கண்டிப்பாக பிறந்தநாள் விழாவிற்கு உங்களின் வருங்கால கணவரை அழைத்து வர வேண்டும் என்று கூறுகிறார்.

இவர்களைத் தொடர்ந்து மற்றொரு பக்கம் எழில், முல்லை, கதிர் ஆகியோர்கள் கோவிலுக்கு வந்தனர் அங்கு குழந்தை பிறக்காததற்கு அவர்களுக்கு தொட்டில் கட்டிப் போடுவதை பார்த்த முல்லை செய்ய வேண்டும் என எண்ணுகிறாள் உடனே அந்த பரிகாரத்தை முல்லை மற்றும் கதிர் செய்கின்றனர்.

அந்த நேரத்தில் எதர்ச்சியாக அமிர்த்தா கோவிலுக்கு குழந்தையுடன் வருகிறார்.  அப்பொழுது அமிர்தாவைப் பார்த்து எழில் சிரித்துக்கொண்டே பேசுவதைத் பார்த்து எழில், முல்லை யாராக இருக்கும் என்று பார்க்கிறார்கள். பிறகு அமிர்தாவை கதிர் மற்றும் முல்லைக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

அமிர்தா எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே கல்யாணம் ஆய்டுச்சு இது என் குழந்தை என்று கூறுகிறாள்.உடனே கதிர் சரி உங்க வீட்டுக்காரர் என்ன வேலை பார்க்கிறார் என கேட்கும்பொழுது அமிர்தா அமைப்பாக என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்.

எழில் அமிதாப் பற்றிய தகவல்களை கதிர் மற்றும் முல்லையிடம் காதலிப்பதையும் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்த மகா சங்கமம் மிகவும் சுறுசுறுப்பாகவும் கலகலப்புடன் பல சுவாரசியங்கள் நிறைந்ததா அமைந்துள்ளது.