கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா.! மேலிருந்து புது ஜோடியை பார்க்கும் பாக்யா..

baakiya lakshmi 12
baakiya lakshmi 12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி ராதிகா அவருடைய திருமணம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது இவர்களுடைய திருமணம் முடிந்தவுடன் மண்டபத்திற்கு சென்ற கோபியின் அப்பா மற்றும் அம்மா இருவரும் நீ இதற்கு மேல் எங்களுடைய மகனே கிடையாது எங்களுக்கு இனி மருமகள் மற்றும் பேரப் பிள்ளைகளை தான் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிடுகிறார்.

மேலும் இனி நாங்கள் செத்தா கூட  முகத்தில் முழிக்காத என கூறிவிட்டு செல்கிறார் இவ்வாறு ராதிகாவை கடுமையாக அனைவரும் பேசியதால் அவர் வில்லியாக மாறி வருகிறார் பிறகு மண்டபத்தை விட்டு வெளியே செல்லும் பொழுது கோபி ராதிகாவை பாக்கியா மேலிருந்து பார்க்கிறார் இதனை பார்த்த உடன் ராதிகா உடனே கோபியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வீட்டிற்கு சென்ற இனியா செழியன் வந்தவுடன் அனைத்து விஷயங்களையும் கூறி கதறி அழுகிறார் பிறகு பாக்யா வந்தவுடன் இனியா மற்றும் செழியன் இருவரும் தனது அம்மாவை கட்டிக் கொண்டு அழுகிறார்கள் பிறகு செழியன் நீ மட்டும் தான் அப்பாவை சரியாக புரிந்து வச்சி இருக்க இனிமே கவலைப்படாதீங்க இந்த வீட்டை நான் பார்த்துக் கொள்கிறேன் என பாக்யாவிற்கு வாக்கு கொடுக்கிறார்.

இதனால் பாக்கியா மகிழ்ச்சியடைகிறார் இவரைத் தொடர்ந்து எழில் வீட்டிற்கு வந்து எப்படிமா இதையெல்லாம் தாங்கிக் கொண்ட என பேசிக் கொண்டிருக்கும் பொழுது செல்வி கோபி கல்யாணத்துக்கு தான் தனது அம்மா சமைக்க போவதை சொல்லி விடுகிறார் இதனை கேட்டவுடன் பாக்கியா கோபி இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை தனது கையால் உடைக்கிறார் எழில்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் ராதிகா கோபி இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள் அங்கு அக்கம் பக்கத்தினர் வந்து இவர் தான் அடிக்கடி இந்த வீட்டிற்கு வருவார் எனக் கூற இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ஆரத்தி எடுக்கிறார்கள் அதன் பிறகு கோவிராதிகா இருவரும் வீட்டிற்குள் செல்கின்றனர். மேலும் மண்டபத்தில் தனக்கு சாதகமாக கோபி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என ராதிகா மிகவும் கோபமாக இருக்கிறார்.

எனவே கோபியை உட்கார வைத்துவிட்டு அவர் கோபமாக ரூமுக்குள் சென்று விடுகிறார் தற்பொழுது கோபி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் இதற்கு மேல் தான் இரண்டு பொண்டாட்டிகளிடமும் மாட்டிக் கொண்ட கோபியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்ற சுவாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.