விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. தற்பொழுது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டு சீரியல்களையும் ஒன்றிணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் சுவாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வந்தது.
இப்படிப்பட்ட எபிசோடு பாக்கியலட்சுமி மற்றும் ராமமூர்த்தி இருவரும் கோபி அவார்டு வாங்கும் நிகழ்ச்சிக்கு செல்கிறார்கள். அங்கு மகிழ்ச்சியாக கோபி ராதிகா இருந்து வரும் நிலையில் கோபி அவார்ட் வாங்கும் பொழுது மேடையில் இதற்கு அனைத்திற்கும் காரணம் என்னுடைய மனைவிதான் என்று கூற ராதிகா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
மேலும் ராதிகாவை மேடைக்கு அழைக்க கோபியின் நண்பர் திடீரென பாக்கியாவை மேடைக்கு அழைத்து விடுகிறார். பிறகு பாக்கியாவும் வேறு வழி இல்லாமல் மேடைக்கு சென்று தன்னுடைய கணவரை மிகவும் கேவலமாக திட்ட ஆனால் மற்ற ஆண்களுக்கு தான் அவர் அறிவுரை கூறுகிறார் என அனைவரும் புரிந்து கொள்கிறார்கள்.
மேலும் இதனால் ராதிகா மிகவும் கோபமடைகிறார். உச்சகட்ட கோபத்தில் இருக்கும் ராதிகா ரூமிற்கு வந்தவுடன் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறார் எவ்வளவு கெஞ்சியும் ராதிகா சமாதானமாகவில்லை மேலும் திருமணமானதை முன்பே உங்களுடைய நண்பரிடம் கூற வேண்டியது தானே என கூற அதற்கான சூழ்நிலை அமையவில்லை என கோபி கூறுகிறார்..
ஒரு கட்டத்திற்கு பிறகு கோபி ரூமை விட்டு வெளியே வந்து விடுகிறார் மேலும் இதற்கு மேல் தான் பாக்யாவின் அருமை கோபிக்கு தெரியவரும் ஏனென்றால் கோபி பாக்கியாவை எவ்வளவு திட்டினாலும் அசிங்கப்படுத்தினாலும் அமைதியாக சென்றுவிடுவார் ஆனால் ராதிகா எதற்கெடுத்த கோபப்பட்டு வரும் நிலையில் இதனால் இவர்களுக்கிடையே கடுமையான சண்டைகள் ஏற்பட்டு வருகிறது இவ்வாறு ஹனிமூன் வந்தது தவறு என நினைக்கிறார் கோபி.