விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகைகளில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. தற்பொழுது கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வந்தது.
மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களை இணைத்து மகா சங்கமமாக ஒளிபரப்பி வருகிறார்கள். தற்போது கோபி ராதிகா இருவரும் தங்களுடைய ஹனிமூன் கொண்டாடுவதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார்கள் அங்கு தனது படத்துக்கு லொகேஷன் பார்ப்பதற்காக எழிலும் தன்னுடைய குடும்பத்துடன் சென்றுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தில் இருப்பவர்களும் மன நிம்மதியாக இருக்கும் என்று நினைத்து வந்த நிலையில் இவர்களை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஜீவாவின் நண்பருடைய திருமணத்திற்காக கொடைக்கானல் வந்துள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வருமா மற்றும் பாக்கியலட்சுமி குடும்பம் ஒருவரை ஒருவர் ஹோட்டலில் சந்தித்துக் கொள்கிறார்கள்.
மேலும் அதே ஹோட்டலுக்கு கோபி, ராதிகா இருவரும் சாப்பிடுவதற்காக வருகின்றனர் அந்த நேரத்தில் எழில் எதார்த்தமாக தன்னுடைய அப்பா கோபியை பார்த்து விடுகிறார் அப்பொழுது நிம்மதியாக கொடைக்கானல் வந்தேன் இங்கேயும் வந்து என்னுடைய நிம்மதியை கெடுக்க பாக்குறியா என எழிலை பேசவிடாமல் கோபி திட்டுகிறார்.
அந்த சமத்தில் ஹோட்டலில் வேலை பார்க்கும் பையன் ஒருவர் வந்து நீங்கள் தானே ஹனிமூன் ரூம் வேண்டும் என்று கேட்டீர்கள் என்று கோபியிடம் கேட்க எழிலின் முன்பு என்ன சொல்வது என்று தெரியாமல் கோபி முழிக்கிறார் எனது உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா என மானங்கெட்ட பேச்சு பேசுகிறார்.
மேலும் அதே ஹோட்டலில் தன்னுடைய அம்மாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் தன்னுடைய அப்பா நெருக்கமாக உட்காந்து இருப்பதை பார்க்க முடியாமல் ஏழில் வருத்தப்படுகிறார். மேலும் கோபி ராதிகாவை கண்ணன் பார்க்க ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கும் கோபி ஹனிமூன் வந்திருப்பது பெரிய வருகிறது. இவ்வாறு மகா சங்கத்தில் பல சுவாரசியமான எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.