ராதிகாவிடம் சொடக்கு போட்டு சவால் விடும் இனியா.! பாக்யாவை அசிங்கப்படுத்தும் கோபி.! கொழுந்து விட்டு எறிய போகும் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்

baakiya-lakshmi-q1
baakiya-lakshmi-q1

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தங்களுடைய நல்லாதரவை தந்து வருகிறார்கள்.

எனவே இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இனியா சென்றிருந்த வேன் விபத்தான நிலையில் கோபி இனியாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார் இதனை தெரிந்து கொண்ட பாக்யா பதறிப் போக பிறகு இனியாவை தேடி ராதிகாவின் வீட்டிற்கு பாக்கியா வாசலில் நின்று இனியாவை பார்க்க வேண்டும் என சொல்லி கூப்பிடுகிறார்.

பிறகு எழிலும் இனியாவை கூப்பிட பாக்யாவின் சத்தம் கேட்ட கோபி அதிர்ச்சி அடைகிறார் பிறகு இனியாவிடம் உன் அம்மா உன்னை கூப்பிட்டுக் கொண்டு சென்று விடுவாள் அப்புறம் எதற்கு டூர் போனாய் என கேட்டேன் உன்னை பயங்கரமாக திட்டுவாள் என சொல்லி ரூமிற்குள் இருக்க வைக்கிறார் வெளியே வந்து கதவை சாவியை போட்டு பூட்டி விடுகிறார்.

இதனைப் பார்த்து ராமமூர்த்தி என்ன செய்கிறாய் என கேட்க இனியா என்னுடைய பொண்ணு என கோபி கூறுகிறார் பிறகு பாக்யா என்னுடைய பொண்ணை நான் பார்க்க வேண்டும் என சொல்ல அவளை காட்ட முடியாது என கோபி சொல்கிறார் அவளை என் கண்ணில் காட்டாமல் அழைத்து சென்றுவிடுகிறீர்கள் என் மகளை நான் பார்த்தால் போதும் என சொல்ல இது என்னுடைய வீடு இனியா என்னுடைய மகள் அவளை காட்ட மாட்டேன் என கோபி சொல்கிறார் இதனால் கோபமடைந்த எழில் தேவையில்லாமல் பேசாதீங்க என சொல்ல நான் அப்படி தான் பேசுவேன் என் குடும்பத்தை என்னிடம் இருந்து பிரித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினாய் அப்பொழுது எனக்கு எப்படி இருந்திருக்கும் என சொல்ல பாக்கியா அதனை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் கோபி பேசுவதை பார்த்து ராதிகாவும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ராமமூர்த்தி தேவை இல்லாமல் பேசாதே என கூறுகிறார் இனியா எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள். ஒரு கட்டத்திற்கு பிறகு கோபி முடியாது எனக்கூற பிறகு பாக்யா எழிலுடன் வீட்டிற்கு செல்கிறார் பின்னர் ராமமூர்த்தி பாக்யாவிடம் கோபி நன்றாக இருப்பதாக ஆறுதல் கூறுகிறார்.

பிறகு இனியாவிடம் ராமமூர்த்தி உன் அம்மா கூப்பிட்டது உனக்கு கேட்கவில்லையா அவளைப் பார்த்தால் உனக்கு பாவமாக இல்லையா என கேட்க உடனே இனியா பாவமாகத்தான் இருந்தது ஆனால் நான் அம்மாவிடம் பேசினால் அப்பா என்னிடம் கோபப்படுவார். மேலும் உனக்கு அம்மா கவலைப்பட்டால் கவலை இல்லையா என ராமமூர்த்தி கேட்க இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ராதிகா கேட்கிறார்.

அப்பொழுது இனியா அப்பா என் மீது கோபமாக இல்லாமல் இருந்தால்தான் நம்ம வீட்டிற்கு வருவார் என சொல்ல ராமமூர்த்தி நீ என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுரியா என கேட்கிறார் உடனே இனியா அப்பா கண்டிப்பாக நம்ம வீட்டிற்கு வருவார் என சொல்ல உடனே ராதிகா எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என சொல்கிறார் உடனே இனியா அப்பாவிற்கு அம்மா மீது தான் கோவம் எங்கள் மீது இல்லை அதனால் கண்டிப்பாக அப்பா வருவார் என சவால் விடுகிறார் ராதிகா என்ன பேசுகிறாய் நீ என்னை கேட்க ராமமூர்த்தி அவர்தான் சின்ன பொண்ணு தெரியாமல் பேசுவதாக கூற இதோடு வருகிறது.