விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது பாக்கியா ராதிகா வேலை செய்து வரும் கம்பெனிகளில் கேண்டின் நடத்தி வரும் நிலையில் எப்படியாவது பாக்யாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற முடிவில் பல முயற்சிகளை ராதிகா செய்து வர எவ்வளவு முயற்சி செய்தாலும் அனைத்தையும் வென்று ராதிகாவை அவமானப்படுத்தி வருகிறார் பாக்யா.
இந்நிலையில் ஒருபுறம் ராதிகா இனியா அவருடைய டியூஷன் பிரண்டுடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து மிகவும் கோபம் வர எனவே இனியாவை வீட்டில் வந்து அனைவரும் முன்பும் திட்டுகிறார் எனவே இனியா கோபப்பட்டு மாடிக்கு செல்ல பிறகு கோபியிடம் எனக்கு இங்கு இருக்கவே பிடிக்கல உங்கள சுத்தமா பிடிக்கல அப்பா நான் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் எனக் கூற அதற்கு கோபி ராதிகா உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்றா என கூறுகிறார் அதற்கு இனியா இதற்கு மேல் இப்படி செய்யக்கூடாது என சொல்லி வையுங்க என்கிறார்.
பிறகு இனியா சாப்பிட வராமல் இருக்க அதற்கு பசிச்சா சாப்பிட்டுப்பா என ராதிகா சொல்கிறார் எனவே கொஞ்ச நேரம் கழித்து ராமமூர்த்தி இனியாவிற்கு ஊட்டி விடுகிறார். இப்படிப்பட்ட நிலையில் இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பாக்கியா சல்வார் அணிந்து கொண்டு ஆபீஸ் இருக்கு செல்கிறார். அங்கு ராதிகா கேண்டினில் யாராவது இருக்காங்களா என பார்க்காமல் யாரும் இல்லை.
எனவே எல்லாரும் சல்வார் போட சொன்னது மூடிட்டு பொய்டாங்க போல என நினைக்க இந்த நேரத்தில் கேண்டினில் வேலை செய்யும் பணி பெண்கள் சல்வாரில் வருகிறார். பிறகு செல்வியும் வர அங்கு எங்க உங்க பாக்கியா மேடம் என ராதியை கேட்கிறார் அப்பொழுது பாக்யா சல்வரில் வருவதைப் பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார் பிறகு பாக்கியா, செல்வி இருவரும் இணைந்து ராதிகாவை அவமானப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார்.