விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கியா தன்னுடன் வேலை செய்பவர்களை வீட்டிற்கு அழைத்து பெரிய ஆர்டர் இருப்பதை குறித்து பேசிவரும் நிலையில் அவர்கள் அதெல்லாம் ரொம்ப கஷ்டம் வேண்டாம் என கூறி வருகிறார்கள் எனவே இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். மேலும் தனக்கு 18 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது எனவே இந்த ஆர்டரை எடுத்து நடத்த வேண்டும் எனக் கூற எதற்கு அவ்வளவு பணம் எனக் கேட்க செல்வி அதெல்லாம் அந்த ராதிகாவால் தான் என கூறுகிறார்.
அதற்கு பாக்யா தேவையில்லாத பற்றி பேச வேண்டாம் என செல்வியை வாயை மூட வைக்கிறார். பிறகு பாக்யா நம்மளால முடியும் என அனைவரையும் ஊக்கப்படுத்த பிறகு அனைவரும் இந்த ஆர்டரை எடுத்துச் செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். அதன் பிறகு பாக்யா இந்த மாசம் சம்பளத்தை நான் வழக்கம்போல் கொடுத்திடுவேன் ஆனால் இந்த ஆர்டர் பணத்தை நான் உடனே தர முடியாது என சொல்கிறார்.
பிறகு பாண்டிச்சேரிக்கு போய் சமைக்க வேண்டுமானால் சம்பளம் இல்லை என்றால் எப்படி என கேட்க நான் சம்பளம் இல்லை என்று எப்பொழுது சொன்னேன் உடனடியாக கொடுக்க முடியாத கொஞ்சம் டைம் எடுத்துட்டேன் ஒரு ரெண்டு மாசம் மூணு மாசத்துல டியூவாக கொடுத்து விடுகிறேன் என சொல்ல அனைவரும் யோசித்து எங்களுக்கு நீ எவ்வளவோ பண்ணி இருக்க உனக்காக நாங்க இதை பண்ணுறோம் கூறிவிட்டு கிளம்புகிறார்கள்.
இதனை எடுத்து மறுபுறம் இனியா எக்ஸாம் முடித்துவிட்டு கோபியுடன் வீட்டிற்கு வர கிளம்ப கோபி உனக்கு பிடித்தவாங்கிட்டு சாக்லேட் வாங்கி வந்திருப்பதாக கூற எனக்கு வேண்டாம் என சொல்கிறார். பிறகு உங்களால் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை நினைத்து வருத்தமாக இருப்பதாகவும் இன்னைக்கு நல்லா எக்ஸாம் எழுதி இருக்கேன் ஆனால் என்னால் சந்தோஷமாக இருக்க முடியல நாளைக்கு ரிவிஷன் பண்ணனும் அதை பற்றியும் யோசிக்க முடியல எப்பொழுது சண்டை வரும் என்ற எண்ணம் தான் இருக்கிறது என சொல்ல அதற்கு கோபி இதற்கு மேல் சண்டை வராது என கூறுகிறார்.
இதனை அடுத்து எழில் பணத்தை எப்படியாவது ரெடி செய்ய வேண்டும் என பேசிக்கொண்டு இருக்க செழியனும் நானும் என்னால் முடிந்த பணத்தை ரெடி பண்ணி தரேன்னு சொல்ல மாலினி விடாமல் போன் செய்து கொண்டே இருக்கிறார். இதனால் எழில் முதல் அதை பேசி தொலடா எனக் கூற ஆனால் அப்புறமா பேசிக்கொள்கிறேன் கட் பண்ணி விடுகிறார். இந்த நேரத்தில் செழியனின் மேனேஜர் ஃபோன் செய்து மாலினி கம்பளைண்ட் செய்திருப்பதால் செழியன் மேல் கோபப்படுகிறார்.
எனவே செழியன் உடனடியாக கிளம்பி மாலினி சந்திக்க கிளம்புகிறார் அப்பொழுது மாலினி நேற்று உங்களை பிடித்து இருக்குன்னு சொன்னதும் நீங்க கிளம்பி போயிட்டீங்க போன் கூட எடுக்க மாட்டேங்கறீங்க அதனாலதான் மேனேஜர் இடம் சொல்லி உங்களை வர வைத்தேன் என்னை சுற்றி நிறைய பேர் இருக்காங்க ஆனா உங்க கிட்ட பேசும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க என்னை பத்தி என்ன நினைச்சாலும் கவலை இல்லை இதுக்கு அப்புறம் சந்திக்க முடியாமல் கூட போகலாம் இன்னைக்கு தான் என் மனசுல இருக்குறத பேச போறேன் என சொல்ல செழியன் அதிர்ச்சி அடைகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.