தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி தொடர்ந்து ஏராளமான சீரியல் ஒளிபரப்பி வருகிறது அந்த வகையில் சமீப காலங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி இன்று எபிசோட்டில் ராதிகா வீட்டிற்கு போன பாக்கியா ராதிகாவின் எதிரே நின்று பல கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
ராதிகா எவ்வளவு அழுது சத்தியம் செய்தாலும் அதனை பாக்யா ஏற்றுக்கொள்ளாமல் நம்பாமல் இருக்கிறார். அப்பொழுது ஹாஸ்பிடல் அவருடைய மனைவியாக இருந்தது என்ன அர்த்தம் என கேட்க அது சூழ்நிலை என ராதிகா சொல்ல தப்பு எல்லாத்தையும் செஞ்சுட்டு சூழ்நிலை மேல தப்பை தூக்கி போடாதீங்க என பாக்யா கூறுகிறார்.
நானும் ஒரு நாடக வழிக்குள் சிக்கிக்கொண்டேன். கோபி உங்களோட கணவர் என்ன தெரிஞ்சதும் அவரைத் விட்டு விலக முடிவு செய்துவிட்டேன். சத்தியமா உங்க வாழ்க்கையில் நான் குறுக்க வர மாட்டேன் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு எனக்கு புரியுது என ராதிகா கூறுகிறார்.
பிறகு மயூரா கீழே இறங்கி வந்து எனக்கு ஃபீவர் ஆன்ட்டி கொதிக்குது பாருங்க என பாக்யாவின் கையை எடுத்து கழுத்தில் வைக்கிறார். பிறகு ராதிகாவும் நான் சொல்றது எல்லாம் உண்மைதான் நம்புங்க என மயூராவின் தலையில் வைத்து சத்தியம் செய்கிறார். என்னையும் என் பொண்ணையும் சபிச்சிடாதீங்க. நீங்க ரொம்ப நல்லவங்க நீங்க சபிச்சா அது கண்டிப்பாக கேட்கும் என கூறுகிறார்.
பிறகு பாக்கியா மயூராவின் தலைமேல் கையை வைத்து நீ ரொம்ப நல்லா இருப்ப பெரியவங்க பண்ண தப்புக்கு நீ என்ன பண்ணுவ என் பொண்ணு இனியா அழுதாலே என்னால் தாங்க முடியாது நீ அழக்கூடாது என கூறுகிறார். பிறகு அங்கிருந்து கிளம்புகிறார். பாக்கியா சமையல் இடத்தில் அமர்ந்து கொண்டிருக்க அப்பொழுது அவருடைய மாமனார் வந்து பாக்கியா என் பொண்ணு மாதிரி இப்படி ஒரு பொண்ணு எனக்கு பொறந்திருக்கக் கூடாதா என்று நான் பல நாள் கவலைப்பட்டு இருக்கேன்.
ஆனால் அந்த படுபாவி இப்படி பண்ணி எல்லோருடைய சந்தோஷத்தையும் கெடுத்துவிட்டான் என கோபியை திட்டுகிறார். பிறகு வாக்கிய விழா நான் சொல்றதை மறுத்து பேசாமல் கேளு என்னுடன் கிளம்பி வீட்டுக்கு வா அந்த வீட்ல உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அவனை கீழே வெளியில கிளம்பி விடலாம் என சொல்ல பாக்கிய தயவு செய்து என்னை திரும்ப திரும்ப இந்த விஷயத்தை சொல்லி உங்க பேச்சுக்கு மறுப்பேச்சு பேச வைக்காதீங்க என்னை உங்க பொண்ணு மாதிரி நினைக்கிறீங்க உங்களுடைய பொண்ணுக்கு இப்படி எந்த நிலைமையும் வந்தா அந்த வீட்ல போய் எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழனும் என அனுப்புவீங்களா? என ராமமூர்த்தி கேள்வி கேட்கிறார்.இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அப்படியே மூர்த்தி நிற்கிறார். பிறகு இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.