எழில் வர்ஷினி கழுத்தில் தாலி கட்டும் போகும் நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட திருமணம்.! பரபரப்பான எபிசோடுகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்த ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது எழில் மற்றும் வர்ஷினியின் திருமண எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது இவர்களுடைய திருமணம் நடைபெறுமா என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

அதாவது கோபி வீட்டை விற்க முடிவு செய்த நிலையில் எப்படியாவது வீட்டை வாங்க வேண்டும் என எழில் பாக்யா முயற்சி செய்தார்கள் ஆனால் இவர்களால் பணம் புரட்ட முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வர்ஷினியின் அப்பா வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் வீடு வாங்குவதற்கு தேவையான பணத்தை தான் தருவதாக கூறியதால் எழில் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

இதனைப் பற்றி அமிர்தாவிடம் எதுவும் கூறாத நிலையில் அமிர்தா தன்னுடைய மாமனார் மாமியார் எதிர்த்து தனது மகளை தூக்கிக்கொண்டு சென்னை வருகிறார் அங்கு எழிலுக்கு நடக்கும் நிச்சயத்தை பார்த்து அதிர்ச்சடைகிறார். மேலும் எழில் அமிர்தாவை பார்ப்பதற்குள் ஈஸ்வரி அவரை அழைத்து மண்டபத்திற்கு வெளியே செல்கிறார்.

அமிர்தாவை அசிங்கப்படுத்திய திட்ட பிறகு அமிர்தா நடந்து செல்கிறார் இந்த நேரத்தில் எழில் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து அமிர்தாவை பார்த்து நடந்த விஷயங்களை கூறி காலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார் இதனை பாக்கியா ஜெனி இருவரும் பார்த்து விடுகின்றனர். இந்த தகவல் பாக்யாவிற்கு பெரிய அதிர்ச்சியை தருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ராமமூர்த்தியிடம் பாக்கியா இதுவரையிலும் நான் எந்த ஒரு முடிவையும் எடுத்தது இல்லை நீங்கள் சொன்னதை தான் கேட்டிருக்கிறேன் ஆனால் தற்பொழுது நான் ஒரு முடிவை எடுக்கப் போகிறேன் எனக் கூற எழில் வர்ஷினிக்கு தாலி கட்ட போகும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியாக இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.