தப்பிக்க முடியாமல் வாயடச்சி போய் நிற்கும் கோபி.! இன்றைய எபிசோட்..

baakiya-lakshmi-today
baakiya-lakshmi-today

விஜய் தொலைக்காட்சியில் இரவு எட்டு முப்பது மணி அளவில் ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாக்கியலட்சுமி. இந்த நாடகத் தொடர் ஒரு ஆண் செய்யும் தவறினால் குடும்பத்தில் உள்ள நபர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள் குறிப்பாக மனைவி எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார் மேலும் அந்த ஆணை நம்பிய பெண் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார் என்பதை தெளிவாக எடுத்துக் கூறும் வகையில் அமைந்த ஒரு சிறப்பான நாடகமாகும்.

விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சிகள் அதிக விருதுகளை பெற்ற நாடகத்தில் இந்த நாடகமும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நாடகத்தின் குறுகிய அளவிலான வீடியோ வெளியாகியுள்ளது, அந்த வீடியோவில் கோபி கனகச்சிதமாக சிக்குவதை போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கோபிக்கு இரவு நேரங்களில் தொலைபேசி அழைப்பு வருவதைப் பற்றி பாக்கியா கோபியிடம் கேட்கிறார் அதற்கு கோபி நான் செய்யும் தொழிலில் இதெல்லாம் சகஜம் முன்ன பின்ன நீ செய்திருந்தால் உனக்கு தெரியும் என்று கூறுகிறார் அதற்கு பாக்கியா நான் உங்கள் அளவிற்கு பெரிய பிசினஸ் செய்யவில்லை என்றாலும் சிறிய அளவில் தொழில் செய்கிறேன் நாங்கள் எப்பொழுதும் வீட்டிற்கு வந்தால் ஃபோன் பேசிக்கொண்டே இருக்கிறோமா? என்று கேட்கிறார்.

அதற்கு கோபி முழித்துக் கொண்டே நிற்க மேலும் பாக்கியா உங்களுக்கு தொழில் ரீதியான அழைப்பு வந்தால் நீங்கள் ஏன் டார்லிங், டியர் என்று இரவு நேரத்தில் போனில் பேசப் போகிறீர்கள்? என்று ஓப்பனாகவே கேட்கிறார்.

அதற்கு கோபி தன்னுடைய மனதிற்குள் இவளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தோம் ஆனால் இப்படி மாட்டிக் கொண்டேனே எப்படி கோபி தப்பிக்க போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய்? என்று தனக்குள்ளே சொல்லிக் கொள்கிறார்.இதையடுத்து கூடிய சீக்கிரம் நாடகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலயே என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.