நரிக்கு நேரம் கிடைச்சா காட்டுக்கே ராஜாவாக பார்க்கும்.. ரஜினி, அஜித்துடன் மோதும் விஜய் சேதுபதி.!

Vijay Sethupathi : தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகுவது வழக்கம் அந்த வகையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் ஜப்பான்,  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோதின அதனை தொடர்ந்து அடுத்த வருடம் பொங்கல் கூறி வைத்து பல படங்கள் வெளிவர இருக்கின்றன.

மேலும் ஏப்ரல் மாதத்திலும் பல டாப் நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம், தலைவர் 170 படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் குறிப்பாக தலைவர் 170 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் உடன் மோதும் ரஜினி, கமல்.! யானைக்கு போட்டி எறும்பா?

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது அடுத்த வருடம் அஜித்தின் பிறந்தநாள் மே 1 ஆம் தேதி  படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களை எதிர்த்து விஜய் சேதுபதியின்  படம் வெளியாக இருக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் ஹீரோ, வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்து வருவதால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கிறது ஜவான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மெர்ரி கிறிஸ்மஸ் படம் பொங்கலுக்கு வெறியாக இருக்கிறது அது தவிர விஜய் சேதுபதி கைவசம் 50, 51 ஆகிய திரைப்படங்களில் இருக்கின்றன.

மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தேன்.. என் அப்பாவின் ஆசைக்கு பலியானேன்..? திரும்பிப் பார்த்தால் எதுவுமே இல்லை.. குமுறிய நீலிமா ராணி

விஜய் சேதுபதியின் 50 -வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் வெகு விரைவிலேயே தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது விஜய் சேதுபதி 51-வது திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் விஜய்சேதுபதி ரஜினி, அஜித் ஆகியவர்களுடன் மோத இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..