தனுஷ் உடன் மோதும் ரஜினி, கமல்.! யானைக்கு போட்டி எறும்பா?

Tamil Movies: சமீப காலங்களாக தொடர்ந்து சூப்பர் ஹிட் வெற்றினை பெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அப்படங்களுக்கும் ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கிற்கு சென்று பார்த்து வருகின்றனர். அந்த வகையில் வாரம் தோறும் முழு புதிய திரைப்படங்கள் வெளியாகுவது போலவே பழைய திரைப்படங்களும் திரையரங்களில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது.

அந்த வகையில் டிசம்பர் 8ம் தேதியான இன்று மட்டும் மூன்று திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது. அதாவது சில திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக தரம் உயர்த்தப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெறுகிறது. இது இதற்கு முன்பு அதிகமாக இருந்தது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் மீண்டும் சில திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது.

ஓவர் குடியால் வாய்ப்பை இழந்த 5 நடிகைகள்.! தடம் மாறிய சதாவின் வாழ்க்கை..

அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ஆளவந்தான் படம் டெக்னிக்கலாக மிகவும் மோசமாக இருந்ததால் படம் தோல்வியினை சந்தித்தது. இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடிக் கூடிய இந்த படத்தினை சுமார் 55 நிமிடம் காட்சிகளை நீக்கிவிட்டு இப்பொழுது 2 மணி நேரம் 3 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய படமாக ரீ-ரிலீஸ் செய்துள்ளார்கள்.

இதனை அடுத்து ரஜினிகாந்த், மீனா இணைந்து நடித்த முத்து படம் வெளியாகிறது. இந்த படம் 1995ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது இந்த படத்திலும் சில காட்சிகள் நீக்கப்பட்டு தற்பொழுது இரண்டே முக்கால் மணி நேரமாக படம் ரிலீஸ் ஆகிறது.

மாசம் ஒரு லட்சம் சம்பாதித்தேன்.. என் அப்பாவின் ஆசைக்கு பலியானேன்..? திரும்பிப் பார்த்தால் எதுவுமே இல்லை.. குமுறிய நீலிமா ராணி

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான புதுக்கோட்டை படம் வசூல் ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் அப்பொழுது வியாபார ரீதியாக தோல்வினை சந்தித்தது. இந்த படம் தற்போது குறைவான தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ஒரே நாளில் மூன்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.