vijay sethupathi : இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தளபதி விஜய் சேதுபதி, இவர் இந்த நிலையை அடைவதற்கு முன்பு பல அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார், கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி சினிமா மீது உள்ள ஆசையால் ஏறி இறங்காத படிகளே கிடையாது.
இன்று விஜய்சேதுபதியை வைத்து படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள், ஏனென்றால் விஜய்சேதுபதி எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்துள்ளார், அந்த வகையில் ஆரம்ப காலத்தில் படத்தில் நடிப்பதற்காக பிரபல தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றுள்ளார்.
அந்த தயாரிப்பாளரோ மிகப் பெரிய தயாரிப்பாளர் வருடத்திற்கு நான்கு திரைப்படங்களை தயாரிக்கும் திறமை கொண்டவர், மிகப்பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் செய்த செயல் தான் கேவலமாக உள்ளது, விஜய் சேதுபதி அந்த தயாரிப்பாளரை சந்திக்க நான்கு மணி நேரங்கள் காத்திருந்தார்.

நான்கு மணி நேரத்திற்கு பிறகு தயாரிப்பாளரை போய் சந்தித்துள்ளார் அப்பொழுது அந்த தயாரிப்பாளர்கள் கூறிய வார்த்தை தான் விஜய் சேதுபதி மனதை பெரிதளவு பாதித்துள்ளது, அவர் கூறியதாவது உன் மூஞ்சியை போஸ்டரில் பார்த்தால் படத்துக்கு எவனும் வரமாட்டான் என்பதைப் போல் மூஞ்சியில் அடித்தது போல் தெரிவித்துள்ளாராம்.
இந்த வார்த்தையை கேட்ட விஜய் சேதுபதி அங்கிருந்து வெளியே வந்துள்ளார், மிகவும் மனமுடைந்து உள்ளார் அப்பொழுது விஜய்சேதுபதி. எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் மிகப் பெரிய நடிகனாக வளர்ந்து இருக்கும் விஜய் சேதுபதியும் இப்படிப்பட்ட அவமானங்களையும் அசிங்கத்தையும் சந்தித்துள்ளார் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
இந்த தகவலை பிரபல யூடியூப் இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது, ஆனால் இப்பொழுது விஜய்சேதுபதியின் கால்ஷீட்டுககாக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இதுதான் விஜய்சேதுபதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.