நெகட்டிவ் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் போகும் விஜய் சேதுபதி – குவியும் படவாய்ப்பு.! இந்தியில் மட்டும் இத்தனை படங்களா.?

vijay-sethupathy
vijay-sethupathy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜய், ரஜினி போன்ற பலரும் சிறப்பான கதைகளை தேர்வு செய்து வருடத்திற்கு ஒரு தரமான படத்தைக் கொடுத்து வருகின்றனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி  வருடத்திற்கு ஆறு ஏழு படம் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதில் பல படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. மேலும் திரையரங்கிலும் அதிகம் விஜய்சேதுபதியின் படம்தான் ஒளிபரப்பப்படுகிறது இதனால் பலரும் விஜய் சேதுபதிக்கு நீங்கள் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள் என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.

ஆனால் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் விஜய் சேதுபதி அவரது போக்கில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகின்றன.

இதற்கு முன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த லாபம், துக்ளக், சங்கத்தமிழன், தர்பார், குட்டி ஸ்டோரி போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும் விஜய்சேதுபதிக்கு வாய்ப்புகள் மட்டும் குறைச்சல் இல்லாமல் வந்த வண்ணமே இருக்கின்றன. விஜய் சேதுபதிக்கு தமிழை தாண்டி மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் கூட 5  திரைப்படங்களில் கமிட்டாகி நடிக்க உள்ளாராம். விஜய் சேதுபதியின் எவ்வளவோ படங்கள் ப்ளாப் ஆனாலும் அவரை தேடி வாய்ப்புகள் மட்டும் வந்த வண்ணமே இருக்கின்றன இதை பார்த்த சினிமா பிரபலங்கள் கூட சிலர் வயித்தெரிச்சல் படுகின்றனர். இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் விமர்சனங்களும் பலரின் வயித்தெரிச்சலும் விஜய்சேதுபதியை ஒன்றும் செய்யாது என பெருமிதம் கூறி வருகின்றனர்.