தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தனது எளிமையை மறக்காமல் அனைவரையும் சமமாக நினைத்து “ரசிகனை ரசிக்கும் தலைவா” என்று ரசிகர்களால் செல்லமாக போற்றப்படுபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் மக்கள் செல்வனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தற்பொழுது சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
இவர் நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி,சமந்தா, நாயந்தரா இவர்களின் கூட்டணி மிகவும் அற்புதமாக இருந்து வருவதால் இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்பத்துடன் மிகவும் ஜாலியாக பார்க்கும் படமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவருடன் விஜய் சேதுபதி மிகவும் நெருக்கமாக மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விஜய் சேதுபதியை தன்னைத் தேடிவந்த ரசிகர்களிடம் எவ்வளவு நேரமானாலும் பேசிக்கொண்டிருப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்.அது குறித்த பல வீடியோக்களை இணைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலுமே இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் அனைவரிடமும் சகஜமாக பழகுபவர் தான் விஜய்சேதுபதி. அதோடு யாரைப் பார்த்தாலும் அன்பாக அவரை கட்டியணைத்து முத்தம் தருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பலரும் இதுவரை பார்த்திடாத விஜய்சேதுபதியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சின்னத்திரை சீரியல் நடிகர் ஈஸ்வரன் ரகுநாதனை அனைவருக்கும் தெரியும். இவர் சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.
இவருக்கு ஸ்ரீபிரியாவுடன் திருமணமாகி சில பிரச்சனைகளால் விவகாரமானது விவாகரத்து பிறகு தொடர்ந்து சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவகையில் ஜீ தமிழ்,சன் டிவி, கலர்ஸ் தமிழ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் இவரும் விஜய்செதுபதியின் நெருங்கிய நண்பர் ஆவார்.இவர் சில மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு காத்துவாக்குல 2 காதல் படத்திற்கு வாழ்த்துக்களை கூறி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.