என்னையடா ஓட விடுறீங்க… திருப்பி அடிக்க சூசகமாக காய் நகர்த்தும் விஜய்.. களத்தை அதிர விட போகும் மாஸ் என்ட்ரி

thalapathy vijay political entry : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அரசியல் களத்திலும் மெல்ல அடியெடுத்து வைத்து வருகிறார். விஜயின் அரசியல் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்  அந்த அரசியலுக்கு எப்ப வர போகிறார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மக்களும் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னுடைய லட்சக்கணக்கான ரசிகர்களை அணிதிரட்டி அதனை மக்கள் இயக்கமாக கட்டமைத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் விலையில்லா மருந்தகம், குழந்தைகள் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஏழை குழந்தைகளுக்கான இரவு நேர பயிலகம் போன்ற பல்வேறு அதிரடியான திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

கமலஹாசனை நினைத்து உருகி உருகி எழுதிய கதை.. இயக்குனர் ராம் வாழ்க்கையில் நடந்த சோகம்

இதனை அடுத்து அடுத்த கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தை வைத்து இலவச சட்ட ஆலோசனை மையம் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் இலவச சட்ட ஆலோசனை மையத்தை விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புசி ஆனந்த் திறந்துவைத்தார்.

குடும்பத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான இலவச சட்ட ஆலோசனை, விபத்தால் இறந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் வாங்கி கொடுத்தல் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குதல் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை பாலியல் ரீதியான பிரச்சனை வங்கி கடன், வீட்டுக் கடன் என பல்வேறு விஷயங்களில் சட்ட ஆலோசனை பெறுவதற்காக இந்த இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

சும்மாவே ஆடுவாங்க விஜய் ரசிகர்கள்.. இதுல வேற காலில் சலங்கையை கட்டி விட்ட சும்மாவா இருப்பாங்க… வெளியானது அதிரடி அப்டேட்!

அடுத்ததாக மருத்துவ முகாம் தொடங்க இருப்பதாக பூசி ஆனந்த் தெரிவித்தார் இந்த நிலையில் விஜயின் அடுத்த கட்ட காய் நகர்தலை  தமிழக அரசியல் களம் உற்று நோக்கி கவனித்து வருகிறது என்பதே எதார்த்தமாக இருக்கிறது. ஏற்கனவே விஜய் லியோ இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி சொல்லுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரை மேடை ஏற விடாமல் ஏதோ ஒரு  அரசியல் பிரபலங்கள் தடுத்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது இதனால் விஜய் திடீரென பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் இசை வெளியீட்டு விழாவில் அதிக நபர்கள் வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதால் தான் வேண்டாம் என முடிவு செய்து நீக்கப்பட்டதாக கூறியிருந்தார்.