தமிழ்சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தமிழில் முதன்முதலில் விஜய் நடிப்பில் வெளியாகிய சுக்கிரன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மேலும் விஜய் ஆண்டனி பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இவர் இசையமைப்பில் வெளியான திரைப்படங்கள் டிஷ்யூம் பந்தயம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், அங்காடித்தெரு, அவள் பெயர் தமிழரசி, பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை.
அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு இவரே இசை அமைத்து வெற்றி கண்டவர். இசையமைப்பதை மட்டும் அல்லாமல் ஹீரோவாக சலீம் பிச்சைக்காரன் ஆகிய திரைப்படங்களையும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் கோடியில் ஒருவன் என்ற திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. மேலும் இன்று தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் பல சினிமா பிரபலங்கள் தொடர்ந்து தங்களின் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் ஆண்டனி தன்னுடைய மனைவி பாத்திமா உடன் இன்று தன்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளார்கள். விஜய் ஆண்டனி மனைவி இதுவரை மீடியா உலகிற்கு விஜய் ஆண்டனி காட்டியதே கிடையாது இந்த நிலையில் முதன்முறையாக தன்னுடைய மனைவியை மீடியா உலகிற்கு தெரிய வைத்துள்ளார்.
இதோ அவரின் மனைவி மற்றும் விஜய் ஆண்டனி புகைப்படம்.
