விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரவுடிதான். இத்திரைப்படத்தின் போது இருவருக்கும் காதல் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதிலிருந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக காதலித்து வரும் இந்த ஜோடி ஷூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளது மேலும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.
இப்படி இருக்க சில தினங்களுக்கு முன்பாக இருவரும் பிரிந்து விட்டதாக சில தகவல்கள் பரவின இதனால் நயன்தாரா ரசிகர்கள் பலரும் இது உண்மையா தெரிந்து கொள்ள ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில், அவரது ட்விட்டர் பக்கங்களிலும் தேட ஆரம்பித்தனர். எந்த ஒரு பதிலும் சரியான முறையில் கிடைக்காததால் ரசிகர்கள் குழம்ப ஆரம்பித்தனர்.
மேலும் சினிமாவுலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன், நயன்தாரா அவ்வளவு எளிதில் பிரிந்து இருக்க வாய்ப்பு இல்லை இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ஒன்று இரண்டல்ல பல புகைப்படங்கள் வெளிவந்த வண்ணமே இருந்ததால் நாம் அனைவரும் அறிந்தது தான் அப்படி இருக்க இவர்கள் பிரிந்திருக்க முடியாது என ரசிகர்களும் ஒரு பக்கமும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் நயன்தாராவை வைத்து மேலும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பாதிப்பால் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்க நயன்தாரா நடிப்பில் அடுத்தாக வெளிவர இருக்கும் படம் நெற்றிகண். படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் விக்னேஷ் சிவன் சில பாடல்கள் நம்மிடம் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் இந்த பாடல் அத்தகைய பாடலாக அமையும் என்றும் குறிப்பிட்டார் அதுபோல நயன்தாராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் நெற்றிகண் படத்தின் பாடல்கள் வெகுவிரைவிலேயே வெளியாக உள்ளது என தனது பக்கத்தில் கூறியிருந்தார்.

இவர்கள் இருவரும் சண்டை போட்டு பிரிந்து இருந்தால் விக்னேஷ் சிவன் நெற்றிகண் படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.