ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை வசூல் செய்த விடாமுயற்சி.. சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டிய அஜித்

Vidaamuyarchi : நடிகர் அஜித்குமார் ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் நம்பி கதை கேட்காமலேயே நடித்தார். அதனால் பல திரைப்படங்கள் தோல்வியில் முடிந்தன இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட அஜித் தனக்கு எந்த மாதிரியான கதை செட் ஆகுமோ  அதை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அதனாலயே கடந்த சில வருடங்களாக வெற்றி நாயகனாக மாறி உள்ளார் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையை முதலில் சொல்லும் போது அஜித் சில மாற்றங்களை செய்ய சொல்லி பிறகு தான் படம் எடுக்கபட்டு வருகிறது.

எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.! அட தலைவன் போயிட்டா எல்லாருக்கும் குளிர் விட்டுடுமே…

விடாமுயற்சி அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்றும், அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அஜித்துடன் இணைந்து  அர்ஜுன், திரிஷா, ரெஜினா,பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத், ஆரவ் என பல திரைபட்டாளங்கள் படத்தில் நடித்து வருகிறார்கள். விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. படம் அடுத்த வருடம் மே 1 அல்லது அதற்கு முன்பாகவே ரிலீஸ் ஆக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இதனால் விடாமுயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரிலீசுக்கு முன்பே பல கோடி அள்ளி உள்ளது  விடாமுயற்சி அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விடாமுயற்சி படம் மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி விநியோகஸ்தர்களும், பல டிஜிட்டல் உரிமமும் படத்தை தட்டி தூக்க போட்டி போட்டு வருகிறது.

கார்த்தி முதல் கௌதம் வாசுதேவ் மேனன் வரை துணை கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களாக ஜொலிக்கும் நட்சத்திரங்கள்..! சங்கர், சமுத்திரகனி, கவுண்டமணியும் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர்களா..

இந்த நிலையில் விடாமுயற்சி சேட்டிலைட் உரிமம் டிஜிட்டல் உரிமம் ஆகியவை விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது சேட்டிலைட் உரிமம் 150 கோடிக்கும்,  டிஜிட்டல் உரிமை 100 கோடிக்கும் விற்பனை செய்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.  இதன் மூலம் விஜய்,ரஜினி போன்ற நடிகர்களின் படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளார் அஜித். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை..