உச்சகட்ட மகிழ்ச்சியில் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிக்கும் வனிதா.! இணையதளத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..

vanitha-vijayakumar
vanitha-vijayakumar

vanitha vijayakumar given a surprise for kamalhaasan photo:நடிகர் கமல்ஹாசன் சிறந்த முன்னணி நடிகராகவும் சிறந்த அரசியல் தலைவராகவும் விளங்கி வருகிறார், கமலஹாசன் நடிப்புத் திறமையைப் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.

இந்த நிலையில் கமலஹாசன் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து கூறினார்கள்.

மேலும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் கமலஹாசன் நன்றி தெரிவித்து அடுத்த பிறந்த நாளை கோட்டையில் சந்திப்போம் என கூறியிருந்தார். அதேபோல் உலக நாயகன் கமலஹாசனுக்கு வனிதா விஜயகுமார் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார், கமலஹாசன் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் கேக் தயார் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார், அந்த கேககில் மக்கள் நீதி மையம் கட்சியல் கொடி இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கருப்பு நிறத்திலான கேக்கில் சிவப்பு நிறத்தில் நம்மவர் என எழுதப்பட்டுள்ளது.

அந்த கேக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உங்களுக்காகவே ஸ்பெஷலாக செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார், இந்த நிலையில் வனிதா பதிவுசெய்துள்ள பிறந்தநாள் கேக்கை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பாராட்டியும் புகழ்ந்தும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.