அடுத்த பிதாமகன் விக்ரம் போல் அருண் விஜய் வெளியானது வணங்கான் teaser..!

Vanangaan Official Teaser: பால இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தரமான கதை அம்சத்துடன் உருவாகி இருக்கும் வணங்கான் பட டீசர் வெளியாகி சமூக வலைதளத்தை தெறிக்க விட்டு வருகிறது. சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் சூர்யா இப்படத்தில் இருந்து விலகினார்.

எனவே தற்போது சூர்யா நடித்து வந்த கேரக்டரில் அருண் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வர விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணங்கான் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரோகிணி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியவர்கள் முக்கிய கேரக்டரில் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

கந்து வட்டிக்காரன் சிட்டிக்கு செருப்படி பதில் கொடுத்த முத்து.. மீனா நீங்க நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு கொஞ்சமாவது புரிஞ்சிகோங்க..

இப்படத்தின் படப்பிடிப்புகள் திருவண்ணாமலை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வருகிறது. 1:05 நிமிடங்களுடன் கூடிய இந்த டீசரில் எந்த வசனமும் இல்லை பின்னணி இசையும் அருண் விஜயின் ஆக்ஷன் காட்சிகளும் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

பொதுவாகவே பாலா தனது படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் வைப்பார் அதேபோல் வணங்கான் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுடன் பயங்கரமாக உருவாகியுள்ளது. மேலும் அருண் விஜய்யின் நடிப்பு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது தனது மிருகத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார்.