கிடைக்கின்ற நேரத்தில் கடா வெட்டும் வலிமை.! ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தம் ஐந்து மொழிகளில் படம் ரிலீஸ்.

valimai
valimai

தமிழ்நாட்டு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கியுள்ள திரைப்படம்தான் வலிமை. ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு முடிக்க மட்டுமே சுமார் இரண்டு வருடங்கள் ஆனாது ஒருவழியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது பல்வேறு தடைகள் தமிழக அரசு விதித்துள்ளது.

காரணம் கொரோனா  மூன்றாவது அலை பரவி உள்ளதால் திரையரங்குகள் 50% மட்டுமே இருக்கைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஒருசில படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் நலன் கருதியே பொங்கல் ரேசிலிருந்து பின் வாங்கியுள்ளது. ஏன் அஜித்தின் வலிமை திரைப்படம் திடீரென ரிலீஸ் தேதியை மாற்றி கொண்டது  சொல்லப்போனால் இன்னும் தேதியை அறிவிக்கவில்லை என்பது தான் உண்மை.

இதனால் அஜித் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களின் தற்பொழுது கவலைப்பட வைத்துள்ளது ஏனென்றால் வலிமை படத்திலிருந்து இதுவரை வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அம்மா பாடல், வேற மாதிரி பாடல், glimpse வீடியோ, மேக்கிங் வீடியோ, ட்ரெய்லர் என அனைத்துமே வேற லெவல் இருந்ததால் வலிமை படத்தை ஜனவரி 13 ம்தேதி பார்க்க ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் அது நிறைவேறாமல் போய் உள்ளதால் கவலையில் இருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத் வலிமை படம் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்த படத்தில் கமிட்டாகி உள்ளாராம் மீண்டும் ஒருமுறை ஹச். வினோத்துடன் கைகோர்த்து தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதற்கான பூஜையும் போட இருக்கிறது. இந்த நிலையில்  வலிமை படம் குறித்து செய்தி ஒன்று உலா வருகிறது அதாவது வலிமை படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தான் ரிலீசாக இருந்தது தற்போது கன்னடம்,  மலையாளத்திலும் வெளியாக இருக்கிறதாம் வலிமை படம் மொத்தம் 5 மொழிகளில் வெளியாகி அசத்தியிருக்கிறது.