லியோ படத்தில் வையாபுரி..! இந்த வாய்ப்புக்கு அவர் பட்ட பாடு இருக்கே.. வைரல் செய்தி

Leo : 90 கால கட்டங்களில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வையாபுரி. இவர் அஜித், விஜய், கமல் தொடங்கி இளம் நடிகரின் படங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தார். வையாபுரி நடித்த சில படங்கள் இன்றும் பேசப்படுகிறது அவ்வை சண்முகி, துள்ளாத மனமும் துள்ளும், உல்லாசம், போக்கிரி..

கண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை சிரிக்க வைத்தது அந்த படங்களும் வெற்றியை பெற்றன. ஒருகட்டத்தில் சுத்தமாக வாய்ப்பு கிடைக்கவில்லை.. இந்த நிலையில் தான் பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார் ஆனால் இவரால் நீண்ட நாட்கள் தாக்க பிடிக்க முடியவில்லை வெளியே வந்த அவருக்கு ஒன்னு ரெண்டு படங்கள் எட்டிப் பார்த்தன ஆனாலும் அந்த படங்கள் சரியாக ஓடவில்லை..

பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கிய சூர்யா.. இதை லவ் என்று நினைத்து சந்தோஷப்படும் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

பின் இவரே வாய்ப்பு தேட ஆரம்பித்தார். தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியுள்ளார். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் -க்கு அடிகடி சென்று வருவாராம் அப்படி கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார் தனது விருப்பத்தையும் கமலுடன் இருக்கிறார்.

ஒரு திருமண விழாவிற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வருவதை கேள்விப்பட்டிருந்த இவர் அங்கு சென்று இருக்கிறார். லோகேஷ் இடம் பேசியும் உள்ளார் ஆனால் விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. லியோ திரைப்படம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது அங்கு சென்று இருக்கிறார்.

ஆனால் லோகேஷ் உதவியாளர் லோகேஷ் ஆக்சன் சீன் எடுத்துக்கொண்டு இருப்பதாக கூறி பின் சில மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டார்களாம்  மாலை நேரத்தில் வாருங்கள் என கூற சிறிது நேரம் கழித்து வந்துள்ளார் லோகேஷை சந்தித்துள்ளார் லோகேஷ் இடம் லியோ  பாடப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு வாழ்த்துக்களை கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

அமிர்தாவை நேருக்கு நேராக பார்த்து கணேசன் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் அப்பா, அம்மா.. பாக்கியலட்சுமி பரபரப்பான ப்ரோமோ

Vaiyapuri
Vaiyapuri

பின் வீட்டுக்கு சென்றவுடன் லோகேஷ் அலுவலகத்திலிருந்து போன் வந்துள்ளது படப்பிடிப்பதற்கான தேதியையும், நேரத்தையும் கூறியுள்ளனர். இவ்வாறு தான் ஆசைப்பட்ட பட வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. லோகேஷ் போன்ற இளம் இயக்குனர்களுடன் வேலை பார்த்தது புதுமையாகவும்,  அனுபவமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.