வடிவேலுக்கு ஜோடியாக 90 s முன்னணி நடிகையா.! அட்ரா சக்க, அட்ரா சக்க

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாமன்னன். நீண்ட இடைவெளிக்கு  பிறகு இந்த திரைப்படத்தில் மீண்டும் நடித்து தனது மார்க்கெட்டை பிடித்தார் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. மேலும் இந்த மாமன்னன் திரைப்படத்தில் இவருடன் இணைந்து பகத் பாஸில், உதயநிதி ஸ்டாலின் போன்றவரும் நடித்திருந்தனர்.

எப்பவும் காமெடியாகவே நடிக்கும் வடிவேலு அரசியல் கதையைக் கொண்ட இந்த திரைப்படத்தில் சீரியஸாக  நடித்திருந்தார். பகத் பாசில் மற்றும்  வடிவேலு இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் ஒருவருக்கொருவர் பஞ்சமில்லாமல் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

மேகனா மேடம் தப்பான ஆளோட சேர்ந்துகிட்டு தமிழை பழிவாங்குறீங்களே.. சரஸ்வதி கேக்குறதுல என்ன தப்பு இருக்கு..

எனவே இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் சூப்பர் குட் பிளிம்ஸ் தயாரிப்பில்  ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக புத்தாண்டின் போது வெளியிட்டிருந்தனர். இந்த திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸின் 98 வது திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ளார் அதுமட்டுமல்லாமல் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம்  பயணத்தின் போது ஏற்படும்  சம்பவங்களை பற்றி உருவாக உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இந்த திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிகை சித்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  நடிகை  சித்தாரா 90களில் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். புது புது அர்த்தங்கள், புதுவசந்தம், புரியாத புதிர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் அக்காவாகவும், மனைவியாகவும் கூட நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எல்லாம் நடிப்பா சூர்யா.. தாத்தா கேட்ட கேள்வி.? கையும் களவுமா ஒரு நாள் மாட்டுவ… மகாவை பார்த்து கடுப்பாகும் ராஜலட்சுமி..!