மெகா ஹிட் திரைப்படங்களை தவறவிட்ட 5 முன்னணி நடிகர்கள்.! அப்பாஸ் நடிக்க வேண்டிய படமா இது…

Tamil Actors: என்னதான் முன்னணி நடிகர்களாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் அனைத்து நடிகர்களும் பல சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை தவற விட்டுள்ளனர். அந்த படங்கள் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் அடித்த பிறகு பட வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டோம் என்று பீல் பண்ணிய ஐந்து நடிகர்களில் படங்கள்.

அப்பாஸ்: 90 காலகட்டத்தில் சாக்லேட் பாயாக பெண் ரசிகர்களை கவர்ந்திருந்த அப்பாஸ் முதலில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் இவர் தான் நடிக்க இருந்துள்ளார். ஆனால் அந்த படத்தின் கதை பிடிக்காத காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலக பிறகு தளபதி விஜய், ஷாலினி இருவரும் இணைந்து நடித்தனர்.

தனுஷின் இரண்டு திரைப்படத்தில் நடிக்க மறுத்த ரஜினி.! பல வருடங்களுக்கு மேடையிலேயே உண்மையை கூறிய சூப்பர் ஸ்டார்..

விஜய் சேதுபதி: ஜிகர்தண்டா திரைப்படத்தில் அசால்ட் கேரக்டரில் முதலில் இவர்தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் ஒரு சில காரணத்தினால் ஜிகர்தண்டா திரைப்படத்திலிருந்து விலகி உள்ளார். பிளாஷ்பேக் காட்சியில் நடித்து அசால்ட் செய்திருப்பார்.

சிம்பு: ஜீவா நடித்த கோ திரைப்படத்தில் முதலில் சிம்பு தான் நடிக்க வேண்டியதாக இருந்தது இதற்கான படப்பிடிப்புகளும் நடைபெற்ற நிலையில் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளரிடம் பிரச்சினை ஏற்பட்டதால் சிம்பு படத்திலிருந்து விலகியுள்ளார்.

விக்ரம்: மணிரத்தினம் இயக்கிய பம்பாய் படத்தில் முதலில் விக்ரம் தான் நடிக்க இருந்துள்ளது அந்த சமயத்தில் வேற படத்தில் நடித்து வந்ததால் இவரால் நடிக்க முடியாமல் போக பிறகு அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அட லட்சுமிமேனனுக்கு இந்த நிலைமை.. யாருடன் ஜோடி சேருகிறார் பார்த்தீர்களா

அஜித் குமார்: சூர்யா நடித்திருந்த கஜினி திரைப்படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்துள்ளது அதற்கான போட்டோ ஷூட்களும் நடைபெற்ற நிலையில் பிறகு சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக பிறகு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் சூர்யாவை வைத்து படம் இயக்கினார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்