அரை கிழவன் ஆனாலும் சினிமாவில் ஜொலிக்கும் 5 நடிகர்கள்.! அட இவருக்கு 50 வயசுன்னு சொன்னா எவன் நம்புவான்..

Top 5 Actors: நடிகைகள் தான் தங்களது அழகு குறைந்தவுடன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி குடும்பம் குட்டி என செட்டில் ஆகி வருகின்றனர். ஆனால் ஹீரோக்கள் 70 வயதை கடந்த பிறகும் அதே அந்தஸ்துடன் பல கோடி சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். உதாரணமாக ரஜினிகாந்தை கூறலாம் 72 வயதை கடந்த பிறகும் பல கோடி சம்பளத்துடன் முன்னணி நடிகராக தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு 50 வயதைக் கடந்த பிறகும் அதே அழகுடன் சினிமாவில் ஜொலித்து வரும் டாப் 5 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

ரஜினிக்காக காத்திருக்க மாட்டேன்.. கிடைத்த நடிகரை ரஜினியாக மாற்ற பார்ப்பேன் – பிரபல இயக்குனர் பேட்டி.!

5. ஷாருக்கான்: 52 வயதாகும் ஷாருக்கான் பாலிவுட்டில் கலக்கி வரும் நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 52 வயதை கடந்தும் ஸ்லிம்மான உடல் அமைப்புடன் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார்.

4. சைஃப் அலி கான்: பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சைஃப் அலிகான் 53 வயதை கடந்தும் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் ரசிகர்களை மிரட்டி வருகிறார்.

3. அனில் கபூர்: அனில் கபூர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இவருக்கு 66 வயதாகிறது ஆனால் பார்ப்பதற்கு 30 வயது போலவே காட்சி அளிக்கிறார்.

பொங்கல்ல நாங்க தான் கிங்.. டிஆர்பி எகிற வைக்க vijay tv யில் ஒளிபரப்பப்படும் புதிய திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

2. கமல்ஹாசன்: நடிகராகவும், தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பன்முகத் திறமைகளை கொண்டு விளங்கும் கமல்ஹாசன் 69 வயதை கடந்துள்ளார். இவரை பார்ப்பதற்கு இளமையாக தெரியவில்லை என்றாலும் கம்பீரமாக அதே எனர்ஜி உடன் இருப்பார்.

1. மம்முட்டி: மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு 72 வயது ஆகிறது ஆனால் ஆனந்தம் படத்தில் எப்படி இருந்தாரோ அதே அழகுடன் தற்பொழுது வரையிலும் இருந்து வருகிறார் இவருடைய படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.