நம்பர் 1 நான் தான் என நிரூபித்த விஜய்.. இரண்டாவது இடத்தில் ரஜினி.. மூன்றாவது இடத்தில் யார் தெரியுமா.?

Top 100 Crores Tamil Actors : தமிழ் சினிமாவில் 2023 ஆம் ஆண்டு வரை இதுவரை 100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்த திரைப்படங்களின் லிஸ்டையும் எந்தெந்த நடிகருக்கு அதிக 100 கோடி திரைப்படம் என்ற லிஸ்டையும் இங்கே காணலாம் இந்த லிஸ்டில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்களின் திரைப்படங்கள் அதிக 100 கோடி வசூல் செய்துள்ளது யார் என்ற விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் தளபதி விஜய் :

தளபதி விஜயின் திரைப்படங்களான துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூல் செய்த திரைப்படங்கள், இதுவரை விஜய்க்கு 11 திரைப்படங்கள் 100 கோடி வசூலை எட்டியுள்ளது.

இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் அன்றிலிருந்து இன்று வரை வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய எந்திரன், கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா, 2.0, பேட்ட, தர்பார், அண்ணாத்த ஜெயிலர் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்கள் இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்பது திரைப்படங்கள் மூலம் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

முத்த காட்சிக்கு விஜய் சொன்ன கண்டிஷன்.! உருட்டு மன்னன் பயில்வான் சொன்ன தகவல்..

மூன்றாவது இடத்தில் அஜித்குமார்:

நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு ஆரம்பம், வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, ஆகிய திரைப்படங்கள் 100 கோடி வசூலை கடந்த திரைப்படங்கள் இதன் மூலம் 8 திரைப்படங்கள் 100 கோடியை கடந்துள்ளதால் நடிகர் அஜித்குமார் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

நான்காவது இடத்தில் சூர்யா சிவகுமார் :

சிங்கம் 2, 24,  சிங்கம் 3, காப்பான், எதற்கும் துணிந்தவன், ஆகிய ஐந்து திரைப்படங்கள் சூர்யாவுக்கு 100 கோடியை கடந்த திரைப்படங்கள் எனக் கூறப்படுகிறது இதன் நிலையில் சூர்யா நான்காவது இடத்தில் இருக்கிறார்.

தனுஷ் – நடிகர் தனுஷ் அசுரன், திருச்சிற்றம்பலம், வாத்தி, என மூன்று திரைப்படங்கள் 100 கோடியை கடந்துள்ளதால் ஐந்தாவது இடத்தில் தனுஷ் தக்க வைத்துள்ளார்.

ஆறாவது இடத்தில் விக்ரம் ; ஐ, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, ஆகிய திரைப்படங்கள் 100 கோடியை கலந்துள்ளதால் ஆறாவது இடத்தில் விக்ரம் இருக்கிறார்.

ஏழாவது இடத்தில் கார்த்தி : பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் இரண்டு, சர்தார், ஆகிய மூன்று திரைப்படங்கள் 100 கோடியை கடந்துள்ளது இதன் மூலம் ஏழாவது இடத்தை தக்க வைத்துள்ளார் கார்த்தி.

எட்டாவது இடத்தில் கமலஹாசன்: விஸ்வரூபம், விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் 100 கோடியை கடந்துள்ளது இதன் மூலம் எட்டாவது இடத்தை கமலஹாசன் தக்க வைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய படங்கள்.. டாப்பில் இருக்கும் ஜெய்லர்

ஒன்பதாவது இடத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் டான் திரைப்படத்தின் மூலம் 100 கோடியை கடந்துள்ளார்.

பத்தாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 மூலம் பத்தாவது இடத்தில் ராகவா லாரன்ஸ் இருக்கிறார்.

11 வது இடத்தில் ஜெயம் ரவி பொன்னின் செல்வன் 2, பொன்னியின் செல்வன் 1 ஆகிய திரைப்படத்தின் மூலமும், 12-வது இடத்தில் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தின் மூலமும், 13வது இடத்தில் விஷால் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலமாகவும் 100 கோடி வசூலை கடந்து தங்களுடைய இடத்தை பிடித்துள்ளார்கள்.