கலைஞர் டிவி வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. முதலிடத்தில் ஜேர் போட்டு உட்கார்ந்த சூர்யா

Tamil Movies: திரையரங்குகளில் புது படங்கள் வெளியாகி எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறாரோ அதேபோல் குடும்பத்தினர்களுடன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்களையும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அந்த வகையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடத்தைப் பிடித்த படங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

பி.எஸ் மித்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் 2.16 ரேட்டிங் உடன் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டின் துவக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் டிஆர்பியில் 2.23 ரேட்டிங்கை பிடித்துள்ளது.

விஜயகாந்த் பயன்படுத்திய சொகுசு கார்கள்.. BMW முதல் VOLVO வரை.. இவ்வளவு பிரமாண்டமா.?

எட்டாவது இடத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பியில் 2.63 ரேட்டிங் பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான விடுதலை திரைப்படம் 2.64 ரேட்டிங் உடன் ஏழாவது இடத்தினை பெற்றிருக்கிறது.

இதனை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டாகுஸ்தி 2.82 புள்ளி விவரத்துடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கவின் நடிப்பில் குறைவான பட்ஜெட்டில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த டாடா படம் 3.45 ரேட்டிங் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

என்னால் உங்களை அடிக்க முடியாது.. நீங்க எவ்வளவு பெரிய இயக்குனர்.. விஜயகாந்த் அடிக்க மறுத்தது யாரை தெரியுமா..

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் நான்காவது இடத்தில் 3.63 புள்ளி விவரத்தை பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் மூன்றாவது இடத்தில் 5.22 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. மேலும் இரண்டாவது இடத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான அரண்மனை 3 டிஆர்பி ரேட்டிங்கில் 5.23 இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு முதலிடத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற ஜெய் பீம் படம் டிஆர்பி ரேட்டிங்கில் 6.15 புள்ளிகளை பெற்றுள்ளது.