2023ல் போட்டி போட்டுக் கொண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள்..

Tamil Top 10 Movies: 2023ஆம் ஆண்டு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி உலகம் முழுவதும் அதிக வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் தமிழ் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது அப்படி இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு அதிகமாக வசூல் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்ற ஆதிபுரூஸ் படம் ரூ.353 கோடியை வசூல் செய்துள்ளது.

ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக் கொண்ட சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரா.? பலருக்கும் தெரியாத அந்த விஷயம்

ராக்கி மற்றும் ராணியின் காதல் கதை திரைப்படம் ரூ. 355 கோடி வசூல் செய்தது. சல்மான் கான் நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக வெளியான டைகர் 3 திரைப்படம் ரூ.466 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழில் ரஜினி மற்றும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றாலும் ரூ.607 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ஜெயிலர்.

விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ படம் உலகம் முழுவதும் ரூ.620 கோடி வசூல் செய்தது ஹிந்தியில் வெளியான கடார் 2 படம் ரூ.691 கோடி வசூல் செய்துள்ளதாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் அனிமல் திரைப்படம் ரூ.797 கோடியான கூறப்படுகிறது.

முதல்ல இயக்குனர், அப்புறம் தயாரிப்பாளர், கேமராமேன், கடைசியாக தான் ஹீரோ இப்படி 15 நாள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு வந்தா பட வாய்ப்பு..? பிரபல நடிகையை குத்தகைக்கு கேட்ட இயக்குனர்….

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1148 கோடி வசூல் செய்துள்ளது. இவ்வாறு 2023ல் அதிக வசூல் செய்து முதல் இடத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் பிடித்துள்ளது. தமிழில் பிரபல இயக்குனரான அட்லீ மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருவருமே பாலிவுட்டிற்கு முதன்முறையாக ஜவான் படத்தின் மூலம் அடி எடுத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.