முதல்ல இயக்குனர், அப்புறம் தயாரிப்பாளர், கேமராமேன், கடைசியாக தான் ஹீரோ இப்படி 15 நாள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு வந்தா பட வாய்ப்பு..? பிரபல நடிகையை குத்தகைக்கு கேட்ட இயக்குனர்….

cinema gossips : சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற எழுதப்படாத விதி இருந்து கொண்டு தான் இருக்கிறது இதற்கு பல நடிகைகள் நடிப்பதற்கு ஆசைப்பட்டு பலிகடா ஆகியுள்ளார்கள் ஆனால் தற்பொழுது அது குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அதிலும் இளம் நடிகைகள் எப்படியாவது படத்தில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இது போல் ஒரு வேலையை செய்து விட்டு பிறகு பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம் இந்த திரைப்படத்தில் கார்த்தியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஜீவிதா. கார்த்திக்கு அக்காவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார் இன்னும் இந்த கதாபாத்திரத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஜீவிதா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது இயக்குனர் ஒருவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது  அதற்கு நீங்கள் ஓகே என்றால் வரலாம் என அழைத்தார்.

ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் அந்த இயக்குனர் கூறியுள்ளார் அதாவது என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் அந்த சமயத்தில் ஜீவிதா அவர்களுக்கு அட்ஜஸ்மென்ட் என்றால் என்ன என்பதை தெரியாது ஆனால் அந்த இயக்குனரோ ஜீவிதா அவர்களிடம் வந்து நீங்கள் 15 நாட்கள் தயாராக இருங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முதலில் இயக்குனர் அறைக்குள் வருவார் அதன் பிறகு தயாரிப்பாளர் கேமராமேன் ஒளிப்பதிவாளர் கடைசியாக ஹீரோ வருவார் என கூறியுள்ளார் இதனைக் கேட்டவுடன் ஜீவிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். இனிமேல் இங்கு இருந்தால் அவ்வளவு தான் என ஜீவிதா அங்கிருந்து ஓட்டம் பிடித்து வந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் அந்த இயக்குனர் யார் என்பதை வெளிப்படையாக கூறவில்லை. பலநடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசுகிறார்கள் ஆனால் யார் அந்த இயக்குனர் நடிகர் என்பதை வெளிப்படையாக கூறவில்லை அவ்வாறு கூறினால் சினிமா இண்டஸ்ட்ரியல் பட வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்பதற்காக தான் இது போல் நடிகைகள் நடந்து கொள்கிறார்கள் இதனால்தான் அட்ஜஸ்ட்மெண்டை தடுக்க முடியவில்லை என  என பலரும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்