தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இவர் சாணி காகிதம், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் இந்தியாவில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒருபுறம் உலகை ஆட்டிப்படைத்த வந்தாலும் ஒரு சில மக்கள் மிகவும் சாதாரணமாக எப்பொழுதும் போல் இருப்பதால் மாஸ் சரியாக அணியாமல், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதால் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்
அந்த வகையில் திரை பிரபலங்களான சிவகார்த்திகேயன், சத்யராஜ், சிவக்குமார், ஜெயம் ரவி,யோகி பாபு என இன்னும் பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் கீர்த்தி சுரேஷு தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அனைவருக்கும் வணக்கம், நான் கீர்த்திசுரேஷ் பேசுகிறேன் கொரோனா தொற்றில் இருந்து வெளிவர வேண்டுமானால் அதை நாம் அனைவரும் நினைத்தால் மட்டுமே முடியும் எனவே சின்ன சின்ன விதி முறைகளை கடைப்பிடித்து தேவையில்லாமல் வெளியே போகாமலும்,அப்படிப் போனாலும் இரண்டு மாஸ்க்குகளை அணிந்து கொள்ள வேண்டும்.
அதோடு முக்கியமாக சமூக இடைவெளி கடைபிடியுங்கள் அடிக்கடி கைகளை கழுவுவது. அரசு சொல்கின்றா அனைத்து விதிகளையும் கடைபிடித்தால் கண்டிப்பாக கொரோனா தொற்றிலிருந்து நாம் அனைவராலும் வெளிவர முடியும். முக்கியமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை மறந்துவிடாதீர்கள். இவ்வாறு நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டால் கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவோம் நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என அந்த விழிப்புணர்வு வீடியோவில் கூறி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.