சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல நிஜத்திலும் ஹீரோ என நிரூபித்த விஜயகாந்த்.. தியாகு சொன்ன பரபரப்பான தகவல்

Actor Vijayakanth: தனது ரசிகர் ஒருவர் செய்த திருட்டு வேலையை பார்த்து விஜயகாந்த் கொந்தளித்தது குறித்து நடிகர் தியாகு பேட்டி அளித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்த விஜயகாந்த் மதுரையைச் சேர்ந்தவர். சினிமா கனவோடு தனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக நெருங்கிய நண்பர் இப்ராஹிம் ராவுத்திரியின் துணையோடு சென்னைக்கு வந்தார்.

இந்த நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் சினிமாவில் உச்சத்தில் இருந்தனர். வில்லனாக நடிக்க தொடங்கிய விஜயகாந்துக்கு ஆரம்பத்தில் சொல்லும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் ஹீரோவாக நடித்தே தீர வேண்டும் என பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

\தனது காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. காதலுக்கு முகம் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்..

எனவே இதன் மூலம் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விஜயகாந்த் நடிப்பு பிடித்துப் போக ரஜினிகாந்த், கமலஹாசனை விட ரசிகர்கள் விஜயகாந்தை கொண்டாடி வந்தனர். எனவே இவருடைய வளர்ச்சிக்கு பிறகு நடிகராக மட்டுமின்றி பொது விஷயங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்தபோது நடிகர்கள் சார்பாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து அதை செயல்படுத்தியவர்

அதேபோல் பிரபாகரன் மீது இருந்த பற்றின் காரணமாக தனது மகனுக்கும் பிரபாகரன் என பெயரை வைத்தார். இவ்வாறு நடிகராக கலக்கி வந்த இவர் அரசியலிலும் ஈடுபட முடிவெடுத்தார். அப்படி கருணாநிதி ஜெயலலிதாவிற்கு போட்டியாக உருவெடுத்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அடுத்த முதலமைச்சர் இவர்தான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாமல் போக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் கூட மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான தியாகு எமோஷனலான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது விஜயகாந்த் மாதிரி ஒரு தைரியசாலியை பார்க்க முடியாது ஒருமுறை விஜயகாந்தின் அலுவலகத்தில் இருந்து நானும் அவரும் வெளியே வந்த போது ஒரு பெண்ணின் செயினை அறுத்துக் கொண்டு ஒருவன் ஓடினான்.

தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

ஐயோ திருடன் என்று அந்த பெண் கத்தியதும் விஜயகாந்த் திருடனை பிடித்து ஜெயினை வாங்கி உரிய பெண்ணிடம் ஒப்படைத்தார். அந்த பெண் உடனடியாக விஜியின் காலில் விழுந்துவிட்டார் அந்த பெண்ணை அனுப்பிவிட்டு என்னிடம் அந்த திருடனை காண்பித்து இவனை என்னடா பண்ணலாம் என்று கேட்டார் நான் விட்ருடா என்று சொன்னேன் உடனே அந்த செயினை அறுத்த நபர் நான் உங்க பெரிய ரசிகன் அண்ணே என்று அழுதபடி விஜயகாந்தை பார்த்து சொன்னான் இவர் உடனடியாக அந்த திருடனுக்கு பளார் பளார் என இரண்டு அறைகளை கொடுத்துவிட்டு என் ரசிகனாக இருந்து கொண்டு ஏண்டா இப்படி பண்ணுன என்ற கோபமாக திட்டி துரத்தி விட்டான். அப்படி இருந்தவனை இப்படி பாக்குறதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு என்று கூறியுள்ளார்.