வாரிசு படத்தின் தோல்விக்கு இதுதான் காரணம்.? விஜயை தாக்கி பேசிய பிரபல பத்திரிகையாளர்

vijay
vijay

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது படம் உலகம் முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக இருந்தது. இதில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா..

ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் என  மிகப்பெரிய நட்சத்திரத்தை பட்டாளமே நடித்தது. படமும் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டு இதனால் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.. தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து தொடர்ந்து அலசப்பட்டு வருகிறது.

அப்படி பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.. வாரிசு மற்றும் விஜய் பற்றி சில தகவல்களை பேசி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வம்சி கதை சொல்லும் போதே ஐந்து கதைகளை கொண்டு சென்றாராம்.. ஆனால் விஜய்க்கு இந்த கதை தான் ரொம்ப பிடித்திருந்ததாம்.

கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்த தளபதி விஜய் இந்த கதையில் எதை பார்த்து ஏற்க மாட்டார் என்று தெரியவில்லை ஒரு வேளை இயக்குனர் வம்சி அதிகமாக சம்பளம் கொடுக்கிறேன் என்று சொன்னதால் விழுந்தாரா என்று தெரியவில்லை அல்லது பொங்கலுக்கு சோலோவாக தானே களமிறங்க போகிறோம் கதை என்ன கதை என்று மெத்தனமாக இருந்திருப்பாரோ என்றும் தெரியவில்லை..

மொத்தத்தில் வாரிசு படத்தை துணிவு திரைப்படம் தூக்கி சாப்பிட்டு விட்டது துணிவு படத்திலும் அந்த அளவிற்கு கதை ஒன்றும் சிறப்பாக இல்லை ஆனால் வாரிசு படம் அரைச்ச மாவையே அரைத்து இருந்ததால் துணிவு திரைப்படம் எவ்வளவோ மேல் என கூறி உள்ளார்.