குறி வைச்சா இறை விழணும்.. தலைவர் 170வது படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு

Vettaiyan: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படத்தின் டைட்டிலுடன் கூடிய வீடியோவை படக்குழு வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்று 73வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

எனவே ரஜினிகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷல் ஆக இவருடைய 170வது படத்தின் அப்டேட்டை படக் குழு வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து தலைவர் 170வது படத்தில் நடித்து வந்தார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் 2 நபர்கள்.! வாய் கொழுப்புக்கு விழுந்த பூட்டு…

தற்பொழுது ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு தலைவரின் 170வது படத்தின் அப்டேட்டை படக் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தலைவர் 170வது படத்திற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஜெயபீம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற இயக்குனர் தா/சே ஞானவேல் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார் தற்பொழுது இந்த படத்தின் டைட்டில் ரிவில் செய்யும் வீடியோவை படக் குழு வெளியிட சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Exit mobile version