ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. படம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது போல படத்திலிருந்து தற்போது பல்வேறு விதமான அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளதால் ரசிகர்களும் இப்படத்தை பார்க்க ரெடியாக இருகின்றனர்.
சில தீவிர ரசிகர்கள் படத்தின் போஸ்டரை அடித்து திரையரங்கு முன்பு ஓட்டி கொண்டாடி வருகின்றனர் இதனால் அனைத்து இடங்களிலும் வலிமை படத்திற்கான வரவேற்பு நன்றாக இருந்து வருகிறது மேலும் அது வலிமை புரமோஷன்னாக ரசிகர்களே இவ்வாறு செய்கின்றனர்.
வலிமை திரைப்படம் அஜித் கேரியரில் மிக முக்கியமான திரைப் படமாக அமைந்திருக்கிறது ஏனென்றால் தமிழை தாண்டி முதன் முறையாக கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இதனால் இந்த படம் வேற லெவலில் ஒரு வசூல் வேட்டையை அள்ளும் கணிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரமோஷன் வேலைகளை போனிகபூர் வேற லெவல் இல் செய்து வருகிறார் மேலும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகிறது தமிழகத்தில் மட்டும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது அதேபோல வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளை கைப்பற்றி வெளியிட முனைப்பு காட்டி வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஆந்திராவிலும் அதிகளவான திரையரங்குகளை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன ஆந்திராவில் மட்டுமே சுமார் 750 திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மொழியிலும் வலிமை திரைப்படம் அதிக அளவிலான திரையரங்குகளை கைப்பற்றிய உள்ளதால் முதல் இரண்டு, மூன்று நாட்களில் மட்டுமே மிகப்பெரிய ஒரு பிரம்மாண்ட வசூல் படைக்கப்பட்டுள்ளது என படக்குழு கணக்குப் போட்டுள்ளது.