பப்பு, பார்ட்டின்னு ஜாலியா இருந்த மனுஷனை அடக்கி போட்ட தளபதி 68.! எகுறும் எதிர்பார்ப்பு

Venkat Prabhu : ஆக்சன், பேய் படங்களுக்கு எவ்வளவு மவுசு இருக்கிறதோ அதே அளவிற்கு காமெடி கலந்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து காமெடி மற்றும் ஆக்சன் படங்களை எடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளவர் வெங்கட் பிரபு. இவர் முதலில் சென்னை 600028 படத்தை எடுத்து அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கோவா, மங்காத்தா, மாஸ் என்கின்ற மாசிலாமணி, மாநாடு கஸ்டடியை தொடர்ந்து விஜயை வைத்து தளபதி 68 படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார். படத்தில் விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, விடிவி கணேஷ், அரவிந்த்..

பெண்களை தொடாத ஒரே நடிகர்.. படத்தில் சொந்த குரலில் பேசாத பிரபலம்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டேன்

அஜ்மல் அமீர்,  பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். தளபதி 68 படம் முழுக்க முழுக்க என்டர்டைன்மெண்ட் கலந்த ஒரு படமாக இருக்கும் என தெரிய வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு ஷூட்டிங் என்றாளே அது ஒரு பார்ட்டி போல தான் இருக்கும் ஏனென்றால் 6 மணிக்கு மேல ஷூட்டிங் எடுக்க மாட்டார்.

தனது நண்பர்களுடன் ஊர் சுற்ற  போய்விடுவார் மேலும் ஷூட்டிங் ஒரு மாதிரி கூச்சலாக தான் இருக்கும்.. ஆனால் தளபதி 68 க்காக தன்னை டோட்டலாக மாற்றிக் கொண்டு உள்ளாராம் காரணம் இது விஜய் படம் என்பதால் அதிரடியாக வேலை பார்த்து வருகிறாராம் கேரவன் சென்று அதிக நேரத்தை செலவிடுவது இல்லையாம்..

பட வாய்ப்பு ஏதுவும் கிடைக்காததால் மீண்டும் பழைய தொழிலுக்கே சென்ற அதிதி ஷங்கர்..! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்

மேலும் தன்னை பாசிடிவாக வைத்துக்கொள்ள கழுத்தில் கருங்காலி மாலை அணிந்து இருக்கிறாராம். தளபதி 68 படம் முடியும் வரை ஜாலி, பார்ட்டி எல்லாத்தையும் மூட்டை கட்டி விட்டாராம். முக்கியமான நண்பர்களை தவிர அனைவரையும் ஒதுக்கி வழக்கத்திற்கு மாறாக இந்த படத்தில் வேலை பார்த்து வருகிறாராம் வெங்கட் பிரபு.