கதறிக் கதறி அழுதுகொண்டே சூப்பர் சிங்கர் 8-லிருந்து வெளியேறிய பிரபலம்… கண்கலங்க வைக்கும் தருணம்..

super singer
super singer

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பெரும் ஆதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீசன் 7 வெற்றிகரமாக முடித்த நிலையில் இதனைத் தொடர்ந்து சீசன் 8 கடந்த மூன்று வாரங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதுவரையும் இல்லாத அளவிற்கு சூப்பர் சிங்கர் 8-ல் பங்குபெற்றுள்ள போட்டியாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர் என்று நடுவர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு பேர் டேன்சர் சூனுக்கு அனுப்பட்டார்கள். இருவரும் மக்கள் மத்தியில் யார் அதிக ஓட்டு வாக்குகள் பெறுகிறார்களோ அவர்களே நிகழ்ச்சியில் தொடர்கள்.

அந்த வகையில் ஜாக்குலின் என்பவர் மக்கள் மத்தியில் வாக்குகள் அதிகமாக பெற்று காப்பாற்றப்பட்டார். 2 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்று சுஷ்மிதா என்பவர் கண்ணீருடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.சுஷ்மிதா மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் கண்கலங்கி அழுதார்கள்.