நாலா பக்கமும் சிதறும் ரத்தம்.! வெளியானது விக்ரம் பா. ரஞ்சித்தின் தங்கலான் டீசர்.!

Thangalaan teaser : ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் பிரம்மாண்டமாக நடித்துள்ள திரைப்படம் தங்கலான் இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பொருட்ச செலவில் உருவாக்கியுள்ளார்கள் கேஜிஎப் தங்க சுரங்கம் என்ற வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளதாக கூறபடுகிறது படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசை அமைத்துள்ளார்.

தங்கலான் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் மற்றும் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இரண்டும் இணைந்து தயாரித்துள்ளது படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

செழியன் போனை பிடுங்கிய பாக்கியா.. விஷயத்தை கோபி கிட்ட சொல்லலாம்னு பார்த்தா குறுக்க நிற்கும் ராதிகா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

படத்தை அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிட இருக்கிறது படக்குழு. இதனால் நவம்பர் 1ஆம் தேதி படத்தின் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது இந்த டீசரில் விக்ரம் ராஜ நாகம் ஒன்றை கழுத்தை திரிவி அப்படியே துண்டித்து விடுகிறார்..

அதுமட்டுமில்லாமல் ஒரு ஆற்றில் மிகப்பெரிய சண்டை நடப்பது போலவும் அப்பொழுதுஆற்றில் தண்ணீர் உடன் ரத்தம் ஆறாக ஓடுகிறது. அதுமட்டுமில்லாமல் வறண்ட நிலத்தில் புழுதி பறக்க சண்டை காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. விக்ரம் இந்த திரைப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் நீண்ட ஜடாமுடி கருப்பு நிற தோற்றம் என பழங்குடி மக்களை போல் இருக்கிறார்.

லியோ அந்த காட்சி பொய் என கதறிவர்களுக்கு பொருத்தமான வீடியோவை வெளியிட்ட படக் குழு.!

அதேபோல் மாளவிகா மோகனன் சினிமாவில் இதுவரை போடாத ஒரு கெட்டப்பை போட்டு நடித்துள்ளார் டீசரில் மிரட்டலான சண்டை காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளது இதை வைத்து பார்த்தால் இந்த படம் முழுவதும் சண்டை காட்சிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதோ டீசர்.