நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான் பஞ்ச் டயலாக் பேசி அர்ஜுனிடம் சவால் விடும் கோதை.!

Thamizhum saraswathiyum today episode : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சிறிய கம்பெனி முதலாளிகள் அனைவரும் தமிழுக்கு உதவி செய்வதால் அவர்களுக்கு தமிழ் நன்றி கூறுகிறார் அவர்கள் சென்றவுடன் நைசாக அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமா கிளம்ப பார்க்கிறார்கள் ஆனால் நமச்சி அவர்களை பிடித்து மூக்கு உடைந்து நிற்க வைக்கிறார். அப்பொழுது கெட்டவர்கள் கிட்ட பணம் மட்டும் தான் இருக்கும் ஆனால் நல்லவங்க கிட்ட இது மாதிரி நல்ல மனுசங்க கூட இருப்பாங்க என கோதை அர்ஜுனிடம் பேசுகிறார்.

அப்புறம் ஏதோ பேசினியே பீனிக்ஸ் பறவையை கூண்டுல அடைச்சாச்சுன்னு பீனிக்ஸ் பறவை அவ்வளவு சீக்கிரம் கூண்டில் அடைக்க முடியாது அது உயர உயர பறந்து கொண்டு தான் இருக்கும் என அர்ஜுனிடம் சவால் விட்டு பேசுகிறார் நான் சொன்ன மாதிரி என் மகன் ஒரு நல்ல நிலைமைக்கு வர தான் போகிறான் அதை நீ பார்க்க தான் போற நீ எத்தனை தடைகளை போட்டாலும் அதை உடைச்சிட்டு வருவான் என பேசுகிறார்.

என்னை யாரும் லவ் பண்ணல.. என் உடல தான் லவ் பண்ணி அனுபவிச்சாங்க.! குமுறும் ஷைனிங் நடிகை.!

அடுத்த காட்சியில் சரஸ்வதி கவரிங் தோடு போட்டதால் காது அரித்து விடுகிறது. அதனால் தமிழ் மன்னிப்பு கேட்கிறார் அது மட்டும் இல்லாமல் இருவரும் பாசம் மழையை பொழிந்து தள்ளுகிறார்கள். அடுத்த காட்சியில் ராகினி நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது கோதை நடேசன் இருவரும் வருகிறார்கள் அப்பொழுது ராகினி அவர்களை பார்த்து வேறு திசையில் போக முயற்சி செய்யும் பொழுது தடுக்கி கொள்கிறார்.

அதனால் கோதை ஓடோடி போய் கொஞ்சம் பார்த்து பத்திரமா போமா என அட்வைஸ் செய்ய நீங்க தான் என் உறவே வேண்டாம் என்று முடிவு பண்ணிட்டீங்களா அப்புறம் எதுக்கு என்கிட்ட வந்து பேசுறீங்க எனக்கு தெரியும் என்ன பாத்துக்க என கூறுகிறார் உடனே கோதை ஜோசியரை பார்த்து விட்டு போகலாமா நடேசன் இடம் கூற பிறகு ஜோசியரை பார்க்க போகிறார்கள்.

தமிழ் பற்றி ஜோசியர் எத்தனை தடைகளை வந்தாலும் அதனை உடைத்தெறிந்து தமிழ் முன்னேறுவார் என கூறுகிறார் ஆனால் ராகினி இன்னும் பத்து நாள் டெலிவரி இருக்கிறது அவருக்கு பெரிய கண்டம் இருக்கிறது அதிலிருந்து அவர் தப்பித்தாக வேண்டும் அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் எனக் கூறுகிறார்.

மற்றொரு பக்கம் தமிழ் கம்பெனியில் இன்னும் மிஷின்கள் ரிப்பேர் செய்ய முடியவில்லை அதனால் எப்படி டெலிவரி செய்ய முடியும் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் உமாபதி வந்து என்னுடைய நண்பன் கம்பெனியில் ஒரு யூனிட் இருக்கிறது அதை விற்க போகிறார்கள். அதைவேண்டுமென்றால் வாடகைக்கு கேட்டு ஒரு வாரம் ஒர்க் பண்ணலாம் என கூறுகிறார்கள்.

வெற்றிகரமாக முடிந்த ரவி, ஸ்ருதி கல்யாணம்.. தர்ம அடி வாங்கிய சீதா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

உடனே தமிழ் இது நல்ல ஐடியாவா இருக்கு சார் கொஞ்சம் நீங்க பேசிட்டு சொல்றீங்களா என கேட்க உமாபதி பேசிவிட்டு அவரை போய் நேரில் சந்திக்க சொல்கிறார் தமிழிடம். இதனால் தமிழ் நான் கிளம்பி போகிறேன் என கூறுகிறார் அடுத்த காட்சியில் கோதை ராகினியிடம் போன் பண்ணி நீ ஜாக்கிரதையா இருக்கணும் உனக்கு கண்டம் இருப்பதாக ஜோசியர் சொல்லி இருக்காங்க அதனால் கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு எனக் கூறுகிறார் என்னை பார்த்துக்க எனக்கு தெரியும் என மூஞ்சில அடித்தது போல் பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.