Thamizhum saraswathiyum february 8 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ஜெயிலரிடம் பணத்தை கொடுத்து சரஸ்வதியை துன்புறுத்த சொல்கிறார் அதேபோல் பணத்தை வாங்கிக் கொண்டு நான் அவளை பார்த்துக் கொள்கிறேன் என ஜெயிலுக்கு வந்து சாப்பாட்டில் உப்பு, காரம் அதிகமாக போட்டு கொடுக்கிறார் அதை மட்டும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தண்ணீரை ஊற்றி டார்ச்சர் செய்கிறார்.
அதேபோல் தமிழ் எப்படியாவது சரஸ்வதியை வெளியே எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் சரஸ்வதிக்கு ஏதோ ஆனது போல் கனவு காண உடனே அடுத்த நாள் காலையில் சரஸ்வதி சென்று பார்க்கிறார் அப்பொழுது ஜெயில் வார்டன் சரஸ்வதியை சித்திரவதை செய்வதை அருகில் உள்ளவர் கூறி விடுகிறார் இதனால் தமிழ் ஜெயில் வாடனை மிரட்டுகிறார்.
அட லட்சுமிமேனனுக்கு இந்த நிலைமை.. யாருடன் ஜோடி சேருகிறார் பார்த்தீர்களா
இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அப்பொழுது சரஸ்வதி வெளியில் எடுக்க ஒரு எவிடன்ஸ் கூட இல்லை என முயற்சி செய்து கொண்டிருக்கிறார் தமிழ் அந்த சமயத்தில் அர்ஜுன் மற்றும் பரமு வந்து நக்கலாக பேசுகிறார் அதனால் தமிழ் கோபப்பட்டு அர்ஜுனை அடித்து வாயைக் கட்டி கட்டையால் அடித்து கார் டிக்கியில் போட்டு குடோனுக்கு அழைத்து செல்கிறார்.
அங்கு அர்ஜுன் மற்றும் பரமுவை கட்டி வைத்து அடித்து உறிக்கிறார் அது மட்டும் இல்லாமல் உண்மையை நீங்களே சொன்னால் தான் விடுவேன் இல்லை என்றால் விடமாட்டேன் உசுருடன் போக முடியாது என மிரட்டுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது. ஒருவேளை அர்ஜுன் பக்காவாக திட்டம் போட்டு தான் தமிழிடம் அடி வாங்குகிறாரா அல்லது தொடர்ச்சியாக அடி வாங்குகிறாரா என்பது தெரியவில்லை.
இதற்குப் பின்பு ஏதாவது சதித்திட்டம் இருக்குமா என்பதும் தெரியவில்லை ஆனால் அர்ஜுன் பெரிய விளைவை சந்திக்க போகிறாய் என தமிழிடம் சவால் விடுகிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிந்தது.