கோதை செய்த செயலால் குடும்பத்தை கல்லாசில்லியாக ஆக்கபோகும் அர்ஜுன்.! தமிழ் எடுக்கபோகும் முடிவு..

thamizhum saraswathiyum today episode december 30 : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் கோதை தமிழ் மற்றும் கார்த்திக்கு தெரியாமல் தமிழின் வக்கீல் இடம் பேசி அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்க திட்டம் போடுகிறார் அவர் இந்த திட்டம் போலவே அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்து விடுகிறது. ஜாமீன் கிடைத்த அர்ஜுன் வெளியே வந்து விடுகிறார். தமிழ் கார்த்தி நமச்சி மூவரும் கம்பெனியில் நின்னு பேசிக் கொண்டிருக்கும் பொழுது எப்படி ஜாமீன் கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கார்த்தி இதில் ஏதோ குழப்பம் இருக்கிறது கண்டிப்பாக யாரோ ஹெல்ப் பண்ணி இருக்காங்க என கண்டுபிடித்து விடுகிறார் அந்த சமயத்தில் அர்ஜுன் ஆட்டோவில் வந்து இறங்குகிறார் இவர்களைப் பார்த்த தமிழ் மற்றும் கார்த்திக் எதற்காக இங்கே வந்த என கேட்கிறார்கள் வெளியே வர மாட்டேன்னு நினைச்சீங்களா என அர்ஜுன் பேசுகிறார் இதனால் கார்த்தி கடுப்பாகி அடிக்க கை ஓங்குகிறார்.

தாலி கட்டுன முதல் கணவருடன் போக மறுக்கும் அமீர்த்தா.. இன்னும் ஒரு வாரம் கெடு வைத்துவிட்டு கிளம்பிய கணேஷ் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

அடுத்த காட்சியில் ராகினிஇடம் கோதை தமிழுக்கும் கார்த்திக்கும் தெரியாமல் அர்ஜுனை வெளில எடுத்தது  குற்ற உணர்ச்சியாக இருக்கிறது எனக் கோதை பேசுகிறார் அப்பொழுது ராகினி இதுக்கு எப்படி நான் நன்றி சொல்வது என்று தெரியவில்லை என தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் ஃபோனை கட் செய்துவிட்டு நிற்கும் பொழுது அர்ஜுன் வருகிறார் அர்ஜுன் ராகினிடம் ரொமான்ஸ் பண்ண அருகில் வர ராகினி பிடித்த தள்ளுகிறார் என்ன ஆச்சு ஏன் சோகமா இருக்கிறாய் என அர்ஜுன் கேட்க அதற்கு ராகினி தமிழ் அணாவுக்கும்  கார்த்திக்கும் தெரியாம தான் அம்மா உங்களை வெயில்ல எடுக்க உதவுனாங்க என கூறுகிறார்.

ஆனா அவுங்கள பேர் சூட்டும் விழாவுக்கு நீ தான் கூப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டியே என வருத்தப்படுகிறார் உடனே அர்ஜுன் நீ உங்க அம்மா அப்பா எல்லாத்தையும் பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடு என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் கோதை தான் என்ன வெளியில் எடுத்ததுன்னு தமிழுக்கு தெரியாதா செம மேட்டர் இருக்கு ஒரு கேம் விளையாடுவோம் என அர்ஜுன் திட்டம் போடுகிறார் இத்துடன் எபிசோட் முடிந்தது.

Biggboss 7 : இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

எவ்வளவு பட்டும் திருந்தாத அர்ஜுன் மீண்டும் கோதை குடும்பத்தை கல்லாசில்லியாக ஆக்கப் போகும் அர்ஜுன்.