கோர்ட்டில் வைத்து கோதையை கிழித்து தொங்கவிட்ட ராகினி.. உன்ன பெத்ததுக்கு கருங்கல்ல பெத்து இருக்கலாம் ராகினி..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சொத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது அப்பொழுது  எங்க அம்மா எனக்கு விருப்பப்பட்டு தான் எழுதி கொடுத்தாங்க நான் எப்படி திரும்ப எழுதி கொடுக்க முடியும் என பேச அதெல்லாம் சரிதாமா இப்ப உங்க அண்ணங்க சொத்து கேக்குறாங்களே அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க என கேட்க அதற்கு ராகினி அண்ணன் தான் ஒரு பெரிய லேத்து கம்பெனி வச்சிருக்கார் அதுல தான் சின்ன அண்ணன் கார்த்தி ஜிஎம்டியா இருக்காரு அப்புறம் அவங்க வசதியா தான இருக்காங்க நான் எதுக்கு எழுதி கொடுக்கணும் என பேசுகிறார்.

இப்படி பேச கோதைக்கு கொதிக்கிறது அது மட்டும் இல்லாமல் கார்த்தி நடேசன் தமிழ் என அனைவரும் கோவப்படுகிறார்கள். நீதிபதி இந்த கேசை தள்ளி வைக்கிறேன் என கூறிவிட்டு வெளியே வருகிறார்கள். நடேசன் கோதை இடம் என் பொண்ணுன்னு சொன்னியே இப்ப எப்படி முதுகில் குத்துனா பார்த்தியா என பேசுகிறார் அதேபோல் ராகினி வெளியே வரும் பொழுது நில்லுடி என நிக்க வைத்து உறவு வேணாம்னு நீ சொல்லிக்கிட்டு இருந்தல இன்னைக்கு நான் சொல்றேன் இனிமே உன் உறவும் வேண்டாம் ஒட்டும் வேணாம் இதுக்கு மேல நீ எனக்கு பொன்னே கிடையாது நீ என் வயித்துல தான் பிறந்தியா.

தங்கையின் மரணத்தை கண்டுபிடிக்க களமிறங்கும் சுந்தர் சி.. திகிலில் மிரட்டும் அரண்மனை 4 ட்ரெய்லர்..

உனக்கும் நல்லது கெட்டது சொல்லி தானே வளர்த்தேன் ஆனா நீ மட்டும் இப்படி அடி முட்டாளா இருக்கியே என திட்டுகிறார். மற்றொரு பக்கம் அர்ஜுன் வீட்டில் அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்கள் சொத்தை எழுதி கொடுத்து விட்டாரா இல்லையா என குழப்பத்தில் இருக்கும் பொழுது அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாமா பரமு வந்து சொத்தை எழுதிக் கொடுக்கவில்லை எதிர்பார்ட்டிக்கு  சரியான பதிலடி கொடுத்துவிட்டார் ராகினி என கூறுகிறார்.

என்ன சொல்ற என கேட்க ஆமா ராகினி சொத்தை எழுதிக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டா அதனால எல்லாம் அதிர்ச்சி அடைஞ்சுட்டாங்க ஆனாலும் ராகினி சோகமாக இருக்கிறார் அம்மா இப்படி சாபம் விடுவது மாதிரி பேசினதே கிடையாது ஆனா இப்ப முதல் முறையா பேசிட்டாங்க என பீல் பண்ணுகிறார். அந்த பக்கம் கோதை நீ ரொம்ப உன் பொண்ணு நம்பினியே இப்ப என்ன செஞ்சுட்டா பாத்தியா இங்க நீதான் ரொம்ப அவளை நம்புன என அனைவரும் கோதையிடம் பேசிக் கொண்டிருக்க அதெல்லாம் விட்டுட்டு வளைகாப்பு வேலையை பார்க்கலாம்.

ஆத்தாடி இவளுங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்தால் நம்ம நிலைமை என்ன ஆகிறது… வீடியோவை பார்த்து புலம்ப போகும் விஜயா…

வளைகாப்புக்கு உடனே இன்னைல இருந்து இன்வைட் பண்ணலாம் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சரஸ்வதி ராகினியையும் கூப்பிடலாம் என கூறுகிறார் ஆனால் அனைவரும் முடியாது என மறுக்க சரஸ்வதி எனக்கு தானே பங்க்ஷன் ராகினியை  கண்டிப்பா எனக்காக கூப்பிடனும் என பேசுகிறார் உடனே தமிழும் ஓகே சொல்லி ராகினி வீட்டிற்கு கோதையை அழைத்துக் கொண்டு செல்கிறார் அங்கே சென்றதும் ராகினி ராகினி என இரண்டு முறை கத்தியதும்.

அபி வருகிறார் அபி உள்ளே அழைக்கிறார் உடனே உள்ளே செல்வதற்கு முன்பு அர்ஜுனின் அம்மா எங்க வந்தீங்க நில்லுங்க என மூஞ்சில அடித்தது போல் பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.