லியோ படத்தின் வசூல் சர்ச்சைகளுக்கு மத்தியில் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்..

Thalapathy Vijay: கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக இருந்து வரும் விஜய் தற்போது தளபதி 68 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தியேட்டர் உரிமையாளர்கள் லியோ படத்தால் தங்களுக்கு லாபம் இல்லை என புலம்பி வருகிறார்கள்.

ஜெயிலர், துணிவு போன்ற படங்களால் தங்களுக்கு நல்ல லாபம் கிடைத்ததாகவும் ஆனால் லியோ படத்தினால் தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை எனவும் இதற்கெல்லாம் தயாரிப்பாளர் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான விஜய் தனது அம்மா அப்பா துணை உடன் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

சிம்பிளாக நடைபெற்ற ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தம்.. வைரல் புகைப்படம்

அப்படி விஜய்யின் அப்பா தன்னுடைய சொந்த பணத்தை வைத்து படங்களை இயக்கி விஜய்யை நடிக்க வைத்தார். இதன் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கிய விஜய் ஒரு கட்டத்தில் தானாக வெளிவந்து முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமானார். இவ்வாறு பூவே உனக்காக படத்தின் மூலம் வெற்றியை கண்ட விஜய் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து கோலிவுட் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

vijay
vijay

அப்படி விஜய்யை பாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்தி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரிலீசான லியோ படம் நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் மத்தியில் வெளியான நிலையில் ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக படக்குழு நேற்று அறிவித்தது. இவ்வாறு இதனால் படக் குழுவினர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு திருப்தி அடையவில்லை.

பொங்கல் ரேசில் இருந்து விலக போகும் 4 படங்கள்.! அந்தரத்தில் தொங்கும் சிவகார்த்திகேயனின் அயலான்

லியோ படத்தால் தங்களுக்கு தான் நஷ்டம் என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டியில் கூறினார். இதனை அடுத்து தளபதி விஜய் தனது அம்மாவுடன் லியோகில் இருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் தளபதி 68 படத்தின் மேக்கப் டெஸ்ட்க்காக அமெரிக்கா சென்று திரும்பிய விஜய் தனது தந்தை அறுவை சிகிச்சை செய்திருந்ததால் நேரில் சென்று பார்த்தார். இந்நிலையில் தற்பொழுது மீண்டும் தனது அம்மாவுடன் விஜய் இருக்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது.