இணையதளத்தில் கசிந்த தளபதி 68 கதை.? மிரட்ட காத்திருக்கும் விஜய்

Thalapathy 68 : தளபதி விஜய் ஒரு படம் முடியும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆகி விடுவார், அந்த வகையில் லியோ படம் ஷூட்டிங் முடிந்த கையோடு உடனே தளபதி 68 படத்தில் இணைந்தார். அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது.

தளபதி 68 படத்தில்  விஜய் உடன் இணைந்து 90 ஸ்  நடிகர் நடிகைகளான சினேகா, லைலா, பிரபுதேவா, மைக் மோகன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் மேலும் மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் அமீர், அரவிந்த், விடிவி கணேஷ், யோகி பாபு, பிரேம்ஜி கங்கை அமரன் என பலரும் நடித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவுக்கு ஏழரை ஆரம்பிச்சுடுச்சு.. அப்பாவிடம் 50,000 கொடுத்து குடும்பத்தை பார்க்க சொன்ன மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பார் என செய்திகள் வெளியாகிய வண்ணமே இருக்கின்றன மேலும் இந்த படத்தில் விஜயை ரொம்ப இளமையாக காட்டவும் முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில்  விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் கதை இதுதான் இதுதான் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இந்த படம் ஒரு டைம் டிராவல் கதை என கூறப்படுகிறது அப்பாவின் காலத்திற்கு மகன் சென்று சில விஷயங்களை மாற்றுவது போல வெங்கட் பிரபு திரைக்கதை அமைத்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

மன்சூர் அலிகான் போல ரஜினிக்கு அந்த நடிகையின் மீது ஆசை.? பகீர் கிளப்பிய பிரபலம்

மார்க் ஆண்டனி கதை போல் தான் இந்த கதையும் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னுடைய திரை உலகில் விஜய் எத்தனையோ கதைகளில் நடித்திருந்தாலும் டைம் டிராவல் போன்ற கதைகளில் நடித்தது இல்லை இதுவே முதல் முறை என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை..