தலைவர் 171 : விஜய் சேதுபதி, பகத் பாசில் எல்லாம் ஓரம்போங்க.. ரஜினிக்கு வில்லனாகும் பணக்கார நடிகர்

SuperStar Rajinikanth : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடி வருகின்றனர் அப்படி இவர் கடைசியாக எடுத்த விக்ரம், லியோ இரண்டு திரைப்படங்களுமே விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.

அதனை தொடர்ந்து லோகேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து தலைவர் 171 படத்தை எடுக்க உள்ளார். தற்பொழுது ரஜினி லால் சலாம் மற்றும் தலைவர் 170 ஆகிய திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் முதலாவதாக லால் சலாம் படம் வெளியாக இருக்கிறது அடுத்து தலைவர் 170 வெளியாக இருக்கிறது.

ஸ்ருதி மேல் ஆசிட் வீச வந்த விச்சு.. கல்லால் அடித்து ஓடவிட்ட மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

தலைவர் 170 ல் ரஜினி இளமையான தோற்றத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது அடுத்து பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் 171 படம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் இயக்க அனிருத் இசையமைக்க ரஜினி நடித்து உள்ளார். இந்த படத்திற்கான வேலைகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார்.

யோவ் லோகேஷ் சைலண்டா வேலைய பாக்குற பாத்தியா.! 10 படம் மட்டும் தான் இயக்குவேன்.. மேட்டர் இது தானா…

கதை எழுதும்போது இந்த படத்திற்கான வில்லனை தேர்வு செய்து விட்டதாக கூறப்படுகிறது. தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க போவது நடிகர் ஜீவன் எனக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் காக்க காக்க. நான் அவன் இல்லை போன்ற பல படங்களில் ஹீரோ, வில்லனாகவும் நடித்து மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.